Back to Top

‘Kelani Breezer’ மின்விசிறிகளை களனி கேபல்ஸ் அறிமுகம்

‘Kelani Breezer’ மின்விசிறிகளை களனி கேபல்ஸ் அறிமுகம்

January 10, 2019  12:41 pm

Bookmark and Share
பாதுகாப்பான இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபல்கள் உற்பத்தியாளரான களனி கேபல்ஸ் பிஎல்சி, இலங்கை சந்தைக்கு பொருத்தமான புதிய ‘Kelani Breezer’ மின்விசிறிகளை அறிமுகம் செய்துள்ளது. கண்கவர் வடிவமைப்பு மற்றும் நீடித்த பாவனை தரத்தைக் கொண்டதாக இது அமைந்துள்ளது.

இந்த அறிமுக நிகழ்வில் களனி கேபள்ஸ் பிஎல்சியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹிந்த சரணபால கலந்து கொண்டார். முதல் தொகுதி ‘Kelani Breezer’ மின்விசிறிகளை, Tecosa Electricals நிறுவனத்தின் உரிமையாளர் டி.வி. பிரசன்ன விதானகே கொள்வனவு செய்தார்.

வுநஉழளய என்பது களனி கேபள்ஸ் நிறுவனத்தின் உற்பத்திகளை விற்பனை செய்வதில் பெருமளவு ஈடுபாட்டைக் கொண்ட மின் உதிரிப்பாக விற்பனை நிலையமாக அமைந்துள்து. இது இரத்மலானையில் அமைந்துள்ளது. அறிமுக நிகழ்வின் போது சுமார் 200 ‘Kelani Breezer’ மின்விசிறிகளை இந்நிறுவனம் கொள்வனவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் முதற்தர மின்சாதனங்கள் மற்றும் மின்விசிறிகள் உற்பத்தியாளரான Havells, இந்த விசேடமான ‘Kelani Breezer’ மின்விசிறிகளை இலங்கை சந்தைக்கு பொருத்தமான வகையில் தயாரித்துள்ளது.

உலகின் 50 க்கும் அதிகமான நாடுகளில் Havells கம்பனி தனது இலத்திரனியல் பொருட்களை விற்பனை செய்த வண்ணமுள்ளது. மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய ‘Kelani Breezer’ மின்விசிறிகளில் விசேட கட்டமைப்புகள் காணப்படுகின்றன. குறைந்த மின்சார வோல்ட் அளவுகளிலும் இயங்கும் திறன் படைத்ததுடன், இரண்டு வருட உத்தரவாதத்தையும் கொண்டுள்ளது. இந்த மின்விசிறிகளின் அலகுகள் சிறந்த காற்றோட்டத்தை வழங்குவதை உறுதி செய்கின்றன. இணைப்புகள் சீராக காணப்படாத நிலையில், மின்விசிறி கீழே விழுவதை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு சங்கிலிகள் காணப்படும்.

சந்தையில் காணப்படும் பெருமளவான மின்விசிறிகளின் அலகுகள் இலகுவில் துருப்பிடிக்கக்கூடியனவாக அமைந்துள்ளன. ‘Kelani Breezer’ மின்விசிறியில் மேல் மற்றும் கீழ் புற மேலுறைகள் காணப்படுவதுடன், மோட்டார் அலுமினிய மேற்பகுதியை கொண்டுள்ளது. இதனால் துருப்பிடித்தல் அல்லது நிறம்மாறல் போன்றன ஏற்படாது.

‘Kelani Breezer’ மின்விசிறிகள் இரட்டை பியரிங்களை கொண்டுள்ளன. மிருதுவான செயற்பாட்டையும் நீண்ட காலம் இயற்கையான செயற்பாட்டை கொண்டதாக அமைந்திருக்கும்.

களனி கேபல்ஸ் பிஎல்சியின் விற்பனை பிரிவின் பொது முகாமையாளர் அனில் முனசிங்க கருத்துத் தெரிவிக்கையில், ´களனி கேபல்ஸ் தயாரிப்புகள் வாடிக்கையாளர்களால் முதல் தர தயாரிப்புகளாக கொள்வனவு செய்யப்படுகின்றன. நாடளாவிய ரீதியில் காணப்படும் ஆயிரக் கணக்கான களனி கேபல்ஸ் வாடிக்கையாளர்கள் தாம் கொள்வனவு செய்துள்ள உயர் தர வர்த்தக நாமம் தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர். எனவே, இலங்கை சந்தைக்கு நாம் மிகுந்த பொறுப்புணர்வுடன் தயாரிப்புகளை அறிமுகம் செய்கிறோம். நாம் இதுவரையில் அறிமுகம் செய்திருந்த தயாரிப்புகள் பூஜ்ஜிய வழுக்களை கொண்டதாக அமைந்துள்ளதுடன், விற்பனையை அதிகரிக்கவும் ஏதுவாக அமைந்துள்ளன´ என்றார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், ´எமது உண்மையான வாடிக்கையாளர்களால் கிடைக்கும் தொடர்ச்சியான வரவேற்பு காரணமாக நாம் ´‘Kelani Breezer’ மின்விசிறியை சந்தையில் அறிமுகம் செய்ய தீர்மானித்தோம். இதனூடாக எமது தயாரிப்பு தெரிவு விஸ்தரிக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற Havells நிறுவனத்தை நாடி ‘Kelani Breezer’ மின்விசிறியை தயாரிப்பதற்கு கோரியிருந்தோம். வெள்ளை, பளுப்பு மற்றும் ஐவரி ஆகிய வர்ணங்களில் இந்த மின்விசிறி காணப்படுகிறது. எதிர்வரும் மாதங்களில் ‘Kelani Breezer’ மின்விசிறி புதிய உள்ளடக்கங்கள் அறிமுகம் செய்யப்படும்´ என்றார்.

களனி கேபல்ஸ் நிறுவனத்துக்கு தரச்சிறப்புக்கான ISO 9000:2008 சான்றுரூபவ் சிறந்த சூழல் முகாமைத்துவத்துக்கான ISO 14001:2004 தரச்சான்றும் வழங்கப்பட்டுள்ளன. தய்கி அகிமொடோ 5S விருதுகளின் தங்க விருதும் களனி கேபல்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 2015 இல் களனி கேபல்ஸ் பிஎல்சி ஆசியாவின் சிறந்த தொழில் வழங்குநர் விருதை தனதாக்கியிருந்தது. களனி கேபள்ஸ் இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபல்ஸ் உற்பத்தி பிரிவு, 2015 தேசிய பசுமை விருதுகள் வழங்கலில் நிலைபேறான அபிவிருத்திக்காக கௌரவிக்கப்பட்டிருந்தது. 2015 இல் நிறுவனம் SLIM வர்த்தக நாமச் சிறப்புகள் விருதுகள் வழங்கலின் போது B2B பிரிவில் சிறந்த நிறுவனசார் சமூக பொறுப்புணர்வு செயற்பாட்டுக்கான விருதை தனதாக்கியிருந்தது. SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் 2012 இல், களனி கேபல்ஸ் பிஎல்சி நிறுவனத்துக்கு சிறந்த வர்த்தக நாமத்துக்கான வெண்கல விருது வழங்கப்பட்டிருந்தது. 2013 இல் இடம்பெற்ற SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் வழங்கலில், இதே பிரிவில் தங்க விருதை தனதாக்கியிருந்தது. SLITAD மக்கள் அபிவிருத்தி 2013 விருதுகள் வழங்கும் நிகழ்வில், தனது ஊழியர்களின் பயிற்சிகள் மற்றும் மற்றும் நலன்புரி செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தமைக்காக தங்க விருதையும் தனதாக்கியிருந்தது. 2016ம் ஆண்டில் தேசிய மனித வளங்கள் சிறப்புக்கான வெள்ளி விருதை தனதாக்கியிருந்ததுடன், ஜனாதிபதி சூழல் விருதுகள் வழங்கும் நிகழ்வில் சூழல் பாதுகாப்பான அறிக்கையிடலுக்கான தங்க விருதையும் தனதாக்கியிருந்தது.

தேசிய சூழல்பாதுகாப்பு சார் அறிக்கையிடலை பின்பற்றுவதற்காக வாக்குறுதி எடுத்துக் கொண்ட இலங்கையின் முதலாவது நிறுவனமாக களனி கேபிள்ஸ் பிஎல்சி திகழ்கிறது. சூழலுக்கு நட்பான சமூகப் பொறுப்பு வாய்ந்த நிறுவனம் எனும் வகையில், களனி கேபிள்ஸ் பிஎல்சி, ´பொறுப்பு வாய்ந்த பராமரிப்பு´ எனும் லேபிளை பயன்படுத்துவதற்கு சான்றை பெற்றுள்ளது. ஏற்றுமதி சந்தைக்கு நிறுவனத்தின் கீர்த்தி நாமத்தில் இது பெருமளவு பெறுமதியை சேர்த்திடும் வகையில் அமைந்துள்ளது.