Back to Top

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக முசம்மில்?

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக முசம்மில்?

January 11, 2019  09:19 am

Bookmark and Share
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம். முசம்மில் நியமிக்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இதேவேளை, முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் நிலூகா ஏக்கநாயக்க அரச மரம் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ​நேற்று (10) இவர்களுக்கு இவ்வாறு நியமனம் வழங்கப்பட்டிருந்தது.

Most Viewed