Back to Top

நீண்ட காலமாக மூடப்பட்டுள்ள கலஹா பிரதேச வைத்தியசாலை

நீண்ட காலமாக மூடப்பட்டுள்ள கலஹா பிரதேச வைத்தியசாலை

January 12, 2019  04:06 pm

Bookmark and Share
கலஹா பிரதேச வைத்தியசாலை நீண்ட காலமாக மூடப்பட்டுள்ளதால் பிரதேச மக்கள் பாரிய இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.

கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை ஒன்று உயிரிழந்ததை அடுத்து ஏற்பட்ட பதற்றநிலைமை காரணமாக வைத்தியசாலையின் வைத்தியர்கள் விலகிக் கொண்டதையடுத்து வைத்தியசாலை மூடப்பட்டது.

கலஹா பிரதேசத்தில் 28 கிராமங்களின் 25,000 இற்கும் அதிகமானவர்கள் மருத்துவ சேவைக்காக கலஹ வைத்தியசாலையை நாடுகின்றனர்.

எனினும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்பட்ட பதற்ற நிலையையடுத்து வைத்தியசாலை 05 மாதங்களாக மூடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக மருத்துவ சேவைக்காக சுமார் 28 கிலோமீற்றர் தூரம் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு பயணிக்க வேண்டியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதன்காரணமாக வெகு விரைவாக குறித்த வைத்தியசாலையை மீண்டும் ஆரம்பிக்குமாறு பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Most Viewed