
மகாத்மா காந்தியின் 71வது நினைவு தினம் இன்று
January 30, 2019 11:43 am
பாரத தேசத்தின் தந்தை என போற்றப்படும் மகாத்மா காந்தியின் 71வது நினைவு தினம் இன்று (30) யாழில் நினைவுகூறப்பட்டது.
அகில இலங்கை காந்தி சேவா சங்கம் மற்றும் இலங்கைக்கான இந்திய துணைத்தூதரகமும் இணைந்து யாழில் அஞ்சலி நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தன.
யாழ் போதான வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு காலை 9.30 மணியளவில் இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் மலர் மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
அதன்பின்னர், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், மற்றும் வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், யாழ்.மாநகர ஆணையாளர் எஸ். ஜெயசீலன் மற்றும் மகாத்மா காந்தி சேவா சங்கத்தின் தலைவர், உறுப்பினர்கள், உட்பட பல்கலைக்கழக பேராசிரியர்கள், எனப் பலரும் மகாத்மா காந்திக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து, மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்த ரகுபதி ராகவ ராஜாராம் பாடலும் இசைக்கப்பட்டன.
(யாழ். நிருபர்கள் சுமித்தி, பிரதீபன்)