Back to Top

ஒடெல்லில் 2019 வசன்த கால ஓய்வுக்கான ‘At Leisure’ தெரிவுகள்

ஒடெல்லில் 2019 வசன்த கால ஓய்வுக்கான ‘At Leisure’ தெரிவுகள்

January 30, 2019  05:23 pm

Bookmark and Share
2019ம் ஆண்டுக்கான புதிய வசன்த கால தெரிவுகளாக பலவற்றை ஒடெல் இம்முறை அறிமுகம் செய்துள்ளது. வேலை நெரத்துக்கு விருந்து நெரத்தக்கு களியாட்ட நிகழ்வுக்கு என பல வசதியான பொருத்தமான தெரிவுகள் இதில் அடங்கும்.

‘At Leisure’ அல்லது ஓய்வின் போது என்ற தொனிப் பொருளில் இவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை ஒரு நவீன நுகர்வோரின் அபிலாஷையாக மாறியுள்ள ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான ஆடைத் தெரிவை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளன. விளையாட்டுக்கான ஆடையைக் கூட இது நாகரிகமாக்ககின்றது. உற்சாகத்தையும் சக்தியையும் பிரதிபலிக்கும் வகையிலும் இவை அமைந்துள்ளன.

ஜனவரி 30ல் இந்தத் தெரிவுகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன. இவை உள்ளுர் காலநிலைக்கு உகந்த துணிகளால் உருவாக்கப் பட்டுள்ளன. கொட்டன், கொட்டன்றேயன், கிறீப், விஸ்கோஸ் மற்றும் நெட் வகை என பல துணிவகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அணிபவர்களுக்கு இளமைத் தோற்றத்தை அளிக்கும் வகையில் இவை அமைந்துள்ளன.

கவர்ச்சியைப் பிரதிபலிக்கும் ஒடெல்லின் 2019 வசன்தகால தெரிவுகள் தினசரி பாவனைக்கு உகந்தவற்றை வழங்கும் விடயத்தில் கூடிய அக்கறை கொண்டு தயாரிக்கப்பட்டள்ளன. வாழ்வியலின் விருப்புக்கும் உடல் மற்றும் உள வளத்துக்கும் அவசியமான விதத்தில் இவை அமைந்துள்ளன. சிவப்பு, இளஞ்சிவப்பு, நீலம், மஞ்சள், ஆரஞ்சு, பச்சை பொன்னிறம் என பல்வேறு வர்ணங்களிலும் பல்வேறு கொலங்களிலும் இந்த ஆடை வகைகள் அமைந்துள்ளன.

சண்ட்ரா மன்சோர், விக்டோரியா பெக்கம், ட்றோய் ஸ்போர்ட், றெட் வெலன்டினோ, ஜோஸி நடோரி, பேர்பெரி என பல புகழ்பூத்த வடிவமைப்பாளர்களின் எண்ணத்தில் இவை உருப்பெற்றுள்ளன. ‘athleisure´ என்ற எண்ணக்கருவின் கீழ் இவை தொகுக்கப்பட்டுள்ளன.

´எமது 2019 வசன்த கால தெரிவுகள் நவநாகரிகத் துறையில் ஆரோக்கியமான வாழ்வு முறையை உற்சாகப்படுத்தும் அதேவேளை ஆரோக்கியமும் உடல் உறுதியும் கொண்டுள்ள செல்வாக்கை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன´ என்று சுறினார் ஒடெல் நிறுவனத்தின் உரிமயைக் கொண்டுள்ள சொப்ட் லொஜிக் குழுமத்தின் சந்தைப் படுத்தல் பணிப்பாளர் தெஸிரி கருணாரத்ன. ´எமது வாடிக்கையாளர்கள் மத்தியில் வேகமாக வளர்ச்சி கண்டு வரும் ஒரு மனோபாவம் உள்ளது அது அவர்கள் எதிர்பார்க்கும் ஆரோக்கியமான உறுதியான வாழ்வு முறையாகும்.

எமது இந்த விஷேட ‘At Leisure’ தெரிவுகள் மூலம் ஒருவருடைய உடல்நிலை மனநிலை மற்றும் ஆன்மிக ரீதியான சுகாதாரத்தின் சமநிலையைப் புரிந்து கொண்ட ஒரு பிரிவினருக்கு நாம் இவற்றை முன் வைத்துள்ளோம். அதேவேளை சுகாதாரத்தையும் வசதியையும் வலியுறுத்தும் இந்தப் பிரிவில் ஏனையவர்களின் கவனத்தையும் நாம் ஈர்த்துள்ளோம்´ என்று கூறினார்.

ஓடெல் நகைத் தெரிவுகளிலும் இவை சேர்க்கப்பட்டள்ளன. புல்வேறு விதமான பொருத்தமான நகைத் தெரிவுகளும் இதில் உள் அடக்கப்பட்டுள்ளன. ஆடைகளில் இருக்கும் அலங்காரங்களுக்குப் பொருத்தமான மலர் வகை அலங்காரங்கள் உற்பட மற்ற வகையும் இணைக்கப்பட்டுள்ளன. ஓடெல் காட்சியகங்களில் இவற்றைத் தெரிவு செய்து கொள்ளலாம்.