Back to Top

செலிங்கோ லைஃப்பின் சந்தா கொடுப்பனவுகள் இப்போது கார்கில்ஸ் புட் சிற்றியிலும்

செலிங்கோ லைஃப்பின் சந்தா கொடுப்பனவுகள் இப்போது கார்கில்ஸ் புட் சிற்றியிலும்

January 31, 2019  04:04 pm

Bookmark and Share
செலிங்கோ லைஃப் காப்புறுதிதாரர்கள் தற்போது தமது காப்புறுதி சந்தா கொடுப்பனவுகளை நாடு முழுவதும் உள்ள 350க்கும் மேற்பட்ட கார்கில்ஸ் புட் சிற்றி நிலையங்களிலும் செலுத்த முடியும்.

ஆயுள் காப்புறுதி தலைவருக்கும் கார்கில்ஸ் வங்கிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கை ஒன்றின் மூலம் இது சாத்தியமாகி உள்ளது.

கார்கில்ஸ் வங்கி வழங்கும் ´கார்கில்ஸ் கேஷ்´ சேவை ஊடாக இந்த நடைமுறை அமுல் செய்யப்படவுள்ளது. வருடம் முழுவதும் 365 நாற்களும் காலை எட்டு மணி முதல் இரவு பத்து மணிவரை செலிங்கோ லைஃப் காப்புறுதி நிறுவனத்துக்கு பணமாக இந்தக் கொடுப்பனவுகளைச் செலுத்த முடியும் என்று கம்பனி அறிவித்துள்ளது.

கார்கில்ஸ் புட் சிற்றியில் கிடைக்கக் கூடிய கார்கில்ஸ் வங்கியில் வைப்புச் செய்வதற்கான பற்றுச் சீட்டில் செலிங்கோ ஆயுள் காப்புறுதி நிறுவனத்தின் பெயரை எழுதி உரிய முறையில் பூர்த்தி செய்து காசாளரிடம் ஒப்படைப்பதன் மூலம் இந்தக் கொடுப்பனவுகளைச் செய்யலாம். இது மிகவும் வசதியான செயற்பாடாகும். நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் செலிங்கோ காப்புறுதிக்கு உரிய பணத்தை செலுத்துவதற்கும் இது வழிவகுத்துள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன் இலங்கை தபால் சேவையோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் நாடு முழுவதும் உள்ள 600க்கு மேற்பட்ட தபால் நிலையங்கள் 3400க்கும் மேற்பட்ட உப தபால் நிலையங்கள் என்பனவற்றிலும் செலிங்கோ காப்புறுதி கொடுப்பனவுகளைச் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

செலிங்கோ லைஃப் காப்புறுதிதாரர்கள் தமது சந்தா கொடுப்பனவுகளைச் செலுத்த மேலும் பல தெரிவுகளும் உள்ளன. கிளை ஒன்றுக்கு விஜயம் செய்து அல்லது கம்பனியின் விற்பனைப் பிரிவினரின் கொண்டு செல்லும் நடமாடும் POS (mPOS) கருவிகளைப் பயன்படுத்தி செலுத்துவதற்கு அப்பால் இணையவழி ஊடாகவும் அவர்கள் தமது கொடுப்பனவுகளைச் செய்யலாம். வங்கி அல்லது கிரடிட் கார்ட் நிலையியற் கட்டளை, டயலொக்கின் eZ Cash நடமாடும் கொடுப்பனவு மேடை அல்லது மொபிடெல் வலையமைப்பின் Mcash சேவை ஊடாகவும் கொடுப்பனவுகளைச் செலுத்தலாம்.

2018ம் ஆண்டில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாகவும் இலங்கையின் மிகச் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக வேர்ள்ட் பினான்ஸால் தெரிவு செய்யப்பட்ட செலிங்கோ லைஃப்; இலங்கையின் அதன் 30 வருட ஆயுள் காப்புறுதித் துறையில் 14 வருடங்களாக ஆயுள் காப்புறுதியில் தலைமை தாங்கும் நிறுவனமாகவும் உள்ளது. சுமார் பத்து லட்சம் செயற்படு நிலையில் உள்ள ஆயுள் காப்புறுதிகளையும் அது கொண்டுள்ளது. உள்ளுர் ஆயுள் காப்புறுதித் துறையில் புதிய கண்டு பிடிப்புகள், அபிவிருத்தி, வாடிக்கையாளர் சேவை, தொழிற்சார் அபிவிருத்தி, கூட்டாண்மை சமூகப் பொறுப்பு என்பனவற்றுக்கும் இது புகழ்பூத்த நிறுவனமாகும்.