Back to Top

மொபிடெல் mCash ஊடாக தாய்லாந்துக்கான சுற்றுப் பயண வாய்ப்பு

மொபிடெல் mCash ஊடாக தாய்லாந்துக்கான சுற்றுப் பயண வாய்ப்பு

January 31, 2019  04:27 pm

Bookmark and Share
புரட்சிகரமான கையடக்கதொலைபேசி பண கட்டமைப்பான mCash ஊடாக, AIA இன்சூரன்ஸைச் சேர்ந்த 10 வெல்த் பிளானர்களுக்கு சகல செலவுகளும் உள்ளடக்கிய தாய்லாந்துக்கான சுற்றுப் பயண வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. விமான டிக்கட்கள் மற்றும் தங்குமிட வசதி போன்றன இதில் அடங்கியிருந்தன. மேலும் 6 வெல்த் பிளானர்களுக்கு ஸ்மார்ட்ஃபோன்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்தது.

2018 ஆம் ஆண்டில் mCash ஊடாக தமது தவணைக்கட்டணங்களைச் செலுத்தியிருந்த AIA வெல்த் பிளானர்களை கௌரவிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டிருந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் அங்கமாக இது அமைந்திருந்தது. காப்புறுதித் துறையில் புரட்சிகரமான தீர்வாக இது கருதப்படுகின்றது. நான்கு மாத காலப்பகுதிக்கு இடம்பெற்ற இந்த ஊக்குவிப்புத் திட்டத்தினூடாக 16 வெற்றியாளர்கள் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். தமது வெல்த் பிளானர் வலையமைப்பில் மொபைல் வொலட் ஊடாக தவணைக்கட்டணங்கள் சேகரிக்கும் முறையை அறிமுகம் செய்வதற்காக mCash உடன் முதலில் கைகோர்த்த வலையமைப்பாக AIA இன்சூரன்ஸ் திகழ்கிறது.

சுமார் நான்கு வருடங்களுக்கு மேலாக AIA இன்சூரன்ஸ் உடன் mCash கைகோர்த்து செயலாற்றியிருந்ததுடன், mCash ஊடாக AIA இன்சூரன்ஸுக்கு தவணைக்கட்டணங்களை சேகரிப்பதில் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தது. வெல்த் பிளானர்கள் அல்லது காப்புறுதி முகவர்களுக்கு அவசியமான ஊக்குவிப்பை இது வழங்கியிருந்ததுடன், mCash இனால் வழங்கப்படும் பெறுமதி சேர்க்கப்பட்ட அனுகூலங்களையும் பயன்படுத்த வாய்ப்பளிக்கிறது.

mCash ஊடாக காப்புறுதி தவணைக்கட்டணங்களை காப்புறுதி முகவர் பெற்றுக் கொள்ளும் போது கிடைக்கும் பெறுமதி சேர்க்கப்பட்ட அம்சங்களில், தரகு கட்டணமொன்று அவர்களை சென்றடையும். சேவை ஊடாக வாடிக்கையாளருக்கு SMS மூலமாக உடனடி கொடுப்பனவு தகவல் மெருகேற்றம் வழங்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் கொடுப்பனவு தொடர்பில் நிம்மதியடைய முடியும். வெல்த் பிளானர்களுக்கு இந்த திட்டம் மிகவும் சௌகரியமானதாக அமைந்துள்ளது, ஏனெனில் அவர்களுக்கு இது நம்பிக்கையூட்டுவதுடன், பணத்தை கொண்டு செல்ல வேண்டிய இடரை தவிர்த்துக் கொள்ளவும் உதவுகிறது.

மேலும் மேலதிக வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய வழிமுறையாகவும் அமைந்துள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பங்களினூடாக காப்புறுதி கட்டமைப்பு மாற்றம் பெற்றுவருவதுடன், AIA இன்சூரன்ஸ் உடன் mCash இன் பிரத்தியேகமான ஏற்பாட்டினூடாக காப்புறுதி சேவை வழங்குநருக்கு வலுவூட்டப்படுவது மாத்திரமன்றி, துறையின் முன்னோடியான நிலையில் நிறுவனத்தை நிலைநிறுத்தி, வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் அந்தஸ்தை சேர்க்கிறது.

நிதி உள்வாங்கலை விஸ்தரிப்பதற்கு மேலதிகமாக, mCash இனால் நுகர்வோர்கள் தமது கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் முறையிலும் புரட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில வருட காலப்பகுதியில் பெருமளவு வளர்ச்சியை mCash பதிவு செய்துள்ளதுடன், நாடளாவிய ரீதியில் தனது வளர்ந்து வரும் வாடிக்கையாளர் இருப்பை தொடர்ந்து பேணி வருகிறது.

மொபிடெலின் mCash சேவையினால் நாட்டின் கையடக்க தொலைபேசி பண கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக புத்தாக்கமான உள்ளம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறைக்கு பொருந்தும் வகையில் புதிய விடயங்களையும் உள்ளடக்கிய வண்ணமுள்ளது.

Most Viewed