Back to Top

பீப்பள்ஸ் லீசிங் வாடிக்கையாளர்களுக்கு Gratitude லோயல்டி அட்டை

பீப்பள்ஸ் லீசிங் வாடிக்கையாளர்களுக்கு Gratitude லோயல்டி அட்டை

February 7, 2019  02:23 pm

Bookmark and Share
இலங்கையின் முன்னணி வங்கிசாரா நிதிச்சேவைகளை வழங்கும் பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு ‘Gratitude’ லோயல்டி அட்டை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் இந்த அட்டைகளை கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் பதில் தலைவர் பிரதீப் அமிர்தநாயகம்ரூபவ் பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான சப்ரி இப்ரஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் சிரேஷ்ட நிர்வாக அங்கத்தவர்களும் கலந்து கொண்டதுடன், பெருமளவான வாடிக்கையாளர்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் சிரேஷ்ட முகாமையாளர்களும் பங்கேற்றனர்.

பீப்பள்ஸ் லீசிங் நிறுவனம் சுமார் இரண்டு தசாப்த கால வரலாற்றைக் கொண்டது. இந்த இரண்டு தசாப்த காலப்பகுதியில், நிறுவனம் பெருவாரியான நிறுவனங்கள், சிறிய நடுத்தரளவு வியாபாரங்கள், தனி வியாபாரிகள், தொழிற்சாலைகள், நிபுணர்கள், விவசாயத்துறை மற்றும் இதர பல துறைகளுடன் தனது 105 உறுதியான கிளை வலையமைப்பினூடாக செயலாற்றியுள்ளது.

‘Gratitude’ லோயல்டி அட்டை பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் 30,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்படவுள்ளது. கோல்ட், பிளாட்டினம் மற்றும் சில்வர் ஆகிய லோயல்டி அட்டைகள் இவர்களுக்கு வழங்கப்படும்.

பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் ‘Gratitude’ லோயல்டி அட்டை ஊடாக, வாகனங்கள் கொள்வனவு, ஆடைகள், பற்றரிகள், தளபாடங்கள், சுற்றுலாத் துறை, பூக்கள், மூக்குக்கண்ணாடி, தங்க ஆபரணங்கள், வாகன பராமரிப்பு சேவைகள், வாகன உதிரிப்பாகங்கள், வைத்தியசாலை கட்டணங்கள் போன்றவற்றை மேற்கொள்ளும் போது விசேட விலைக்கழிவுகளை பெற்றுக் கொள்ள முடியும்.

‘Gratitude’ லோயல்டி அட்டையுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகைகளை பெற்றுக் கொடுக்க பல முன்னணி வியாபாரங்கள் முன்வந்துள்ளன. இவற்றில் Nolimit, Vision Care, Amaya Hotels and Spa, Asiri Hospitals, Auto Miraj, CIB, Damro, Jetwing Hotels, Jinasena company, Lassana Flora, People’s Travels, Senok, Swarnamahal, Lanka Ashok Leyland, Janashakthi Insurance, JAT Holdings, Toyota Lanka, Dimo, Mydeal.lk மற்றும் David Pieris Motor Company போன்றன அடங்குகின்றன.

பீப்பள்ஸ் லீசிங் ‘Gratitude’ லோயல்டி அட்டையுடன் இணைந்து கொள்ள மேலும் பல நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான சப்ரி இப்ரஹிம் கருத்துத் தெரிவிக்கையில், ‘Gratitude’ லோயல்டி அட்டை என்பது நிறுவனத்தின் உண்மையான வாடிக்கையாளர்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு திட்டமாக அமைந்துள்ளது.´ என்றார்.

´வாடிக்கையாளர்களுக்கு பல வசதிகளை பீப்பள்ஸ் லீசிங் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்த லோயல்டி அட்டையுடன், எமது உண்மையான வாடிக்கையாளர்களுக்கு பல அனுகூலங்களை பெற்றுக் கொடுக்க முடியும் என்பதுடன். இதற்காக எம்முடன் பெருமளவான நிறுவனங்கள் இணைந்துள்ளன. எதிர்காலத்தில் மேலும் பல நிறுவனங்களை இந்த திட்டத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்ட வண்ணமுள்ளோம்.´ என்றார்.

1995ம் ஆண்டு பீப்பள்ஸ் லீசிங் கம்பனி நிறுவப்பட்டிருந்தது. இது இலங்கையின் மாபெரும் அரச வங்கியான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகும். இலங்கையின் வங்கிசாரா நிதித்துறையில் சந்தை முன்னோடியாக பீப்பள்ஸ் லீசிங் கம்பனி திகழ்கிறது.

கம்பனியின் உயர் தர கடன் நியமத்துக்காக, Fitch ரேட்டிங் லங்காவினால் AA-(lka) எனும் கடன் தரப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளதன் மூலம் உயர்ந்த மட்ட தரப்படுத்தலைப் பெற்ற நிதிச் சேவை வழங்குநர் எனும் நிலையை கொண்டுள்ளது. இலங்கையில் இரு சர்வதேச தரப்படுத்தல்களை பெற்ற ஒரே உள்நாட்டு நிதித் தாபனமாக பீப்பள்ஸ் லீசிங் திகழ்கிறது. இதில் ஒன்று Standard & Poor´s (´B+/B´) க்கு நிகரானதாக அமைந்துள்ளது. மற்றையது Fitch ரேட்டிங் இன்டர்நஷனலின் ´B´ தரப்படுத்தலாகவும் அமைந்துள்ளது.

பீப்பள்ஸ் லீசிங் நிறுவத்தினால் வழங்கப்படும் நிதிச் சேவைகளில் லீசிங், வாகன கடன், நிலையான வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், வீடமைப்பு மற்றும் வியாபார கடன்கள், தங்கக் கடன்கள், மார்ஜின் டிரேடிங், ஃபக்டரிங் மற்றும் இஸ்லாமிய வங்கியியல் சேவைகள் போன்றன அடங்கியுள்ளன.

இந்நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக பீப்பள்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி, பீப்பள்ஸ் மைக்ரோ-ஃபினான்ஸ் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் புரொபர்டி டிவலப்மன்ட் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் ஃப்லீட் மனேஜ்மன்ட் லிமிடட் மற்றும் பீப்பள்ஸ் லீசிங் ஹவ்லொக் புரொப்பர்டீஸ் லிமிடெட் ஆகியன காணப்படுகின்றன.

பீப்பள்ஸ் லீசிங் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்கு ஒரே கூரையின் கீழ் பரந்தளவு நிதிசார் சேவைகளை வழங்குவதால் வாடிக்கையாளர்களுக்கு சகல சேவைகளையும் இலகுவான முறையில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது.

Most Viewed