Back to Top

இன்றும் கொழும்பில் நீர் வெட்டு

இன்றும் கொழும்பில் நீர் வெட்டு

February 10, 2019  11:12 am

Bookmark and Share
கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு இன்று (10) 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 04.00 மணி முதல் 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மொரகஸ்முல்ல, ராஜகிரிய, எதுல்கோட்டே, ஒபயசேகரபுர, பண்டாரநாயக்க புர, நாவல, கொஸ்வத்தை மற்றும் ராஜகிரியிலிருந்து திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதிகள் மற்றும் உள்வீதிகள் ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.