Back to Top

25 அடி பள்ளத்தில் பாய்ந்து வேன் - ஒருவர் படுகாயம்

25 அடி பள்ளத்தில் பாய்ந்து வேன் - ஒருவர் படுகாயம்

February 10, 2019  06:15 pm

Bookmark and Share
ஹட்டன், கொழும்பு வீதியின் ஸ்டெடன் பகுதியில் வேன் ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிகப்படுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து கொட்டகலை பகுதிக்கு அதிக வேகமாக வந்த வேன் வலது பக்க சில்லு (டயர்) திடீரென கழன்று வீழ்ந்த நிலையிலே நேற்று (09) இரவு 25 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது

குறித்த வேனில் பெண் ஒருவர் உட்பட மூவர் பயணித்துள்ளதாகவும் விபத்தில் வேன் சாரதியே படுகாயமடைந்து வட்டவளை வைத்தியசலையில் அனுமதிக்கப்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

(மலையக நிருபர் இராமச்சந்திரன்)

Most Viewed