Back to Top

வடபுலத்திற்கான புகையிரத சேவைகள் வழமை நிலைக்கு

வடபுலத்திற்கான புகையிரத சேவைகள் வழமை நிலைக்கு

February 10, 2019  11:30 pm

Bookmark and Share
வடபுலத்திற்கான புகையிரத சேவைகள் வழமை நிலைக்கு திரும்பியுள்ளன என்று அனுராதபுரத்தின் புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பயணித்த ரயில் ஒன்று இன்று தம்புத்தேகம புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டதினால் வடபுலத்திற்கான புகையிரத சேவைகள் தடைப்பட்டன.

யாழ்ப்பாணத்திலிருந்து மாத்தறை பிரதேசத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயில் வண்டியே இவ்வாறு தடம்புரண்டது. இருப்பினும், இந்த நிலைமையை சீர்செய்ய அனுராதபுரம் புகையிரத நிலைய அதிகாரிகள் உடனடியாக செயற்பட்டு புகையிரத சேவைகளை தற்சமயம் வழமை நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)