
ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது
February 12, 2019 06:28 am
நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (ஐஓசி) தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதாக நிதியமைச்சு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.
அதன்படி 95 ஒக்டைன் பெற்றோல் 5 ரூபாவால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, டீசல் 4 ரூபாவாலும், சுப்பர் டீசல் 8 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதாகவும் ஐஓசி தெரிவித்துள்ளது.
92 ஒக்டைன் பெற்றோல் விலை அதிகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.