Back to Top

ஒரு மில்லியன் பயனாளிகளை கடந்த இலங்கையின் முதலாவது மற்றும் ஒரேயொரு YouTube Channel

ஒரு மில்லியன் பயனாளிகளை கடந்த இலங்கையின் முதலாவது மற்றும் ஒரேயொரு YouTube Channel

February 12, 2019  07:33 am

Bookmark and Share
இலங்கையின் முதற்தர ஊடகமான தெரண தொ​லைக்காட்சி, தனது பார்வையாளர்களின் நம்பிக்கையை மேலும் உறுதி செய்யும் விதமாக 10 இலட்சம் பயனாளிகளை பதிவு செய்து, இலங்கையின் முதலாவது மற்றும் ஒரேயொரு YouTube channel ஆக மாறியுள்ளது.

தெரண தொ​லைக்காட்சியின் YouTube channel, 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

பார்வையாளர்களின் தொடர் ஆதரவுடன் வெற்றிகரமான பயணத்தை ஆரம்பித்த நாங்கள், இன்று இலங்கையில் உள்ள அனைத்து YouTube channelகளையும் கடந்து அதிகளவான பயனாளிகளை பதிவு செய்த YouTube channel ஆக மாறியுள்ளோம்.

தெரண தொ​லைக்காட்சியின் YouTube channel இல் இதுவரையில் 13,000 இற்கும் அதிகமான காணொளிகள் upload செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றை 847 மில்லியனுக்கு அதிகமான முறை பயனாளிகள் பர்வையிட்டுள்ளனர்.

இவ்வாறு பயனாளிகளினால் குறித்த காணொளிகள் பார்க்கப்பட்ட காலத்தை கணிப்பிடுகையில், அது 12,792 வருடங்களாக பதிவாகியுள்ளது.

எங்களது YouTube channel இனை நாளாந்தம் 4 இலட்சத்திற்கு அதிகமான பயனாளிகள் பார்வையிடுவதுடன், அது 25 வருடங்களுக்கு சமனான காலத்தை காட்டுகின்றது.

தெரண தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் நாடகங்கள், ரியலிட்டி நிகழ்ச்சிகள், இசை மற்றும் கல்வி நிகழ்ச்சிகளை எமது YouTube channel இல் பார்வையிடுவதற்கான வசதிகள் உள்ளன.

தெரண தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் ´மலி´, ´சிது´, ´தெவனி இனிம´ மற்றும் ´ராவணா´ ஆகிய நாடகங்கள் இலங்கையின் முதற்தர நாடகங்களாக பார்வையாளர்களின் இதயத்தை வென்றுள்ளதுடன் அவற்றையும் எமது YouTube channelஇன் ஊடாக பார்வையிடுவதற்கான வசதிகள் உள்ளமை சிறப்பம்சமாகும்.

ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இலங்கையின் முதற்தர ஊடகமான தெரண தொலைக்காட்சி, YouTube channelஇன் ஊடாக பெற்றுக் கொண்ட இந்த வெற்றியின் மூலம் அதனை மறுபடியும் உறுதி செய்துள்ளது.

அத்துடன் தெரண ஊடக வலையமைப்பின் 13 ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி மனுசத் தெரணவின் ஊடாக ஆரம்பிக்கப்பட்ட ´ஒரு மில்லியன் மரக்கன்றுகள்´ வேலைத்திட்டத்தின் இறுதி நிகழ்வுகள் நேற்று (11) மாலை நடைபெற்றது.

ஒரு மில்லியன் மரக்கன்றுகளில் எஞ்சியிருந்த 12,000 மரக்கன்றுகள் இன்று நிகவெரட்டிய அரச மரக்கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்டது. அவை குருணாகல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.