Back to Top

பெண் ஒருவரை கொலை செய்தவர் விளக்கமறியலில்

பெண் ஒருவரை கொலை செய்தவர் விளக்கமறியலில்

February 23, 2019  11:11 am

Bookmark and Share
உரும்பிராய் பகுதியில் பெண்மணி ஒருவரை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில், பிரதான சூத்திரதாரிகளான சகோதரர்கள் இருவரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதே இடத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் சதீஸ் மற்றும் ரவிச்சந்திரன் நிசாந்தன் (வயது 24) ஆகிய இருவருமே கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர், யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், இருவரும் யாழ். திருநெல்வேலி சிவன் அம்மன் வீதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

கடந்த 6 மாத காலத்திற்குள் உரும்பிராய் பகுதியில் வயதான பெண்மணி ஒருவர் கோடாரியால் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

அந்த சம்பவம் நடைபெற்ற பின்னர், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில், மூவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான சந்தேக நபர்களான மூவரை பொலிஸார் தேடி வந்தனர்.

பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கையின் போது, பிரதான சூத்திரதாரிகளான இந்த இருவரும் யாழ்ப்பாணம் நகரப் பகுதிக்குள் நடமாடுவதாக மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலி;ல் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன்,இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு இளைஞரை பொலிஸார் தேடி வருகின்றதாகவும் கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

(யாழ். நிருபர் சுமித்தி)