Back to Top

காணி உரிமையை வென்றெடுப்பதற்கு கேப்பாபுலவில் இருந்து கொழும்பு நோக்கிய பயணம் ஆரம்பம்

காணி உரிமையை வென்றெடுப்பதற்கு கேப்பாபுலவில் இருந்து கொழும்பு நோக்கிய பயணம் ஆரம்பம்

February 26, 2019  04:09 pm

Bookmark and Share
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமது சொந்தநிலம் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கேப்பாபுலவு மக்களின் காணிகள் உள்ளிட்ட யுத்தகாலத்தில் அபகரிக்கப்பட்ட மக்களின் காணிகளை விடுவிக்க கோரி "யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் காணி உரிமையை வெற்றிகொள்வோம்" என்ற தொனிப்பொருளில் கேப்பாபுலவில் இருந்து கொழும்பு நோக்கிய பயணம் இன்று (26) ஆரம்பமாகியுள்ளது.

கேப்பாபுலவில் தமது சொந்தநிலம் கோரி இன்று 727 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கேப்பாபுலவு மக்களது போராட்ட இடத்திலிருந்து இன்று காலை 10.30 மணியளவில் பயணத்தை ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் சென்று உதவி மாவட்ட செயலாளர் செல்வி ஆ.லதுமீரா அவர்களிடம் மகஜர் கையளித்து கொழும்பு நோக்கி பயணமாகியுள்ளனர்.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் ஆரம்பமான இந்த பயணம் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னா, வவுனியா ஊடாக கொழும்பு சென்று 2 ஆம் திகதி கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

(முல்லைத்தீவு நிருபர் தவசீலன்)

Most Viewed