Back to Top

1000 ரூபாய் இயக்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம்

1000 ரூபாய் இயக்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம்

March 3, 2019  07:10 pm

Bookmark and Share
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரி இன்று (03) பொகவந்தலாவ நகரத்தில் 1000 ரூபாய் இயக்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெழும்பாக திகழும் பெருந்தோட்டதுறை சார்ந்த தொழிலாளர்களுக்கு ஏன் ஆயிரம் ரூபாவை வழங்க முடியாது என கேள்வி எழுப்பியுள்ள இந்த 1000 ரூபாய் இயக்கத் முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.

சுமார் 100ற்கும் மேற்பட்ட பொகவந்தலாவ பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பொகவந்தலாவ நகரில் எதிர்ப்பு வாசகங்களை எழுதிய சுலோகங்களையும் ஏந்தியவாறு பொகவந்தலாவ நகரத்தில் ஊர்வலமாக சென்றனர்.

தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி சுகபோக வாழ்க்கையை நடத்தும் கம்பனிகாரர்கள் இன்றைய வாழ்வாதாரத்தினை நினைவில் வைத்துக் கொண்டு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை வழங்க வேண்டும் என அழுத்தமான கோரிக்கையையும் முன்வைத்தனர்.

(மலையக நிருபர் கிரிஷாந்தன்)