Back to Top

இரு வேறு பகுதிகளில் வெடிபொருட்கள் மற்றும் வெடிகுண்டு மீட்பு

இரு வேறு பகுதிகளில் வெடிபொருட்கள் மற்றும் வெடிகுண்டு மீட்பு

March 6, 2019  06:20 pm

Bookmark and Share
கிளிநொச்சி கண்ணகி நகர் பகுதியில் பாவனைக்கு உதவாத வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (05) விசேட அதிரடிப்படையினரால் குறித்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகி நகர் கழிவு நீர் செல்லும் ஆற்றுப்பகுதியில் வெடி பொருட்கள் இருப்பதை அவதானித்த கிராம மக்கள், அக்கராயன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து அக்கராயன் பொலிஸ் அதிகாரிகள் குழு நீதிமன்ற அனுமதியை பெற்று விசேட அதிரடிப்படையினர் மூலம் வெடிப்பொருட்களை மீட்கப்பட்டுள்ளனர்.

இதன் போது எல்எம்ஜி ரவைகள் ஒரு தொகுதி, மோட்டார் எறிகனை ஒன்று என்பன மீட்கப்பட்டுள்ளன. இவை அனைத்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன

இதேவேளை, மன்னார் நகர் பகுதியில் ஆபத்தான கிளைமோர் மீட்பு குண்டு ஒன்றை மன்னார் பொலிஸார் இன்று (06) காலை மீட்டுள்ளனர்.

மன்னார் பெரியகடை பள்ளிவாசல் ஒழுங்கை மற்றும் மீன் சந்தை பகுதிக்கு செல்லும் பிரதன பாதை சந்தியில் இருந்து குறித்த கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை மன்னார் நகர சபை ஊழியர்களினால் துப்பவரவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் குப்பைக்குள் இருந்து குறித்த பகுதியில் இருந்து குறித்த குண்டு மீட்கப்பட்டுள்ளது.

மேற்படி மீட்கப்பட்ட கிளைமோர் குண்டு சுமார் 3 கிலோ கிராம் நிறை கொண்டது என தெரிய வருகின்றது.

குறித்த பகுதியில் அதிகளவிலான பழைய இரும்புகள் கொள்வனவு செய்யும் கடைகள் காணப்படுகின்றமையினால் பழைய இரும்பு பொருட்களுடன் கலந்து குறித்த கிளைமோரும் வந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.

அதே நேரத்தில் குறித்த வெடி பொருள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

(அத தெரண நிருபர்கள் நிபோஜன், லெம்பட்)