Back to Top

புதுருளிய நகருக்குச் சென்ற மொபிடெல் கேஷ் பொனான்ஸா

புதுருளிய நகருக்குச் சென்ற மொபிடெல் கேஷ் பொனான்ஸா

March 11, 2019  11:23 am

Bookmark and Share
நெடுநாட்களாக காத்திருந்த மொபிடெல் கேஷ் பொனான்ஸா நிகழ்வு கடந்த 23 ஆம் திகதி பெப்ரவரி 2019 அன்று புதுருளிய நகரின், கபுரவல பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. வாடிக்கையாளர்கள், குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் என ஒன்று கூடி முன்னெடுத்த நிகழ்வு, மொபிடெல் கேஷ் பொன்ஸா நிகழ்ச்சி புகழ் பெற்றுள்ளது. இலங்கையின் தேசிய சேவை வழங்குனரான மொபிடெல்லின், கடந்த மூன்று வருட பிரசாரமானது, நிகழ்வில் மகிழ்வுடன் செலவு செய்து விசேட நினைவுகளை உருவாக்குவதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டுக்கும் மகிழ்ச்சியை கொண்டுள்ளது. 37ஆவது தடவையாக புதுருளிய நகரில் மொபிடெல் கேஷ் பொனான்ஸா நிகழ்வு நடைபெற்றது. இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு இந்த நாளுக்காக காத்திருந்தனர்.

அனைத்து இனங்கள், பால்நிலைகள் மற்றும் வயதுப் பிரிவினைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பித்து, கட்டாயம் பங்குபற்ற வேண்டிய நிகழ்வாக அது மாறியதுடன், கடந்த 12 மாதங்களில் பல்வேறு நகரங்களிலும் இடம்பெற்றது. நுழைவாயிலில் இலவச அனுமதி வழங்கப்பட்டிருந்தமையால், பெரும் எண்ணிக்கையிலானோர் இந்த நிகழ்வில் கலந்து கொன்டர். உண்மையான மொபிடெல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் பரிசளிப்பு நிகழ்விற்கு அடுத்தபடியாக, அதிக மக்களை கவரும் நிகழ்வாக இந்த நிகழ்வின் இசை நிகழ்வ உள்ளது. உள்நாட்டு கலைஞர்களின் கால்களை ஆட வைக்கும் இசை நிகழ்ச்சி மாத்திரமன்றி, மக்கள் அனைவரும் கலந்து கொள்ளக் கூடிய சிறு சிறு நிகழ்வுகளுடன் ஒரு குடும்ப ஒன்று கூடலைப் போல் அமைந்திருந்தது.

பங்கி ஜம்பிங் முதல் ஓவியப் போட்டிகள், IOT செயலமர்வுகள், சிறுவர்களுக்கான விளையாட்டுத் திடல் மற்றம் மொபிடெல் சேவைகள் kiosks தயாரிப்புக்கள் என அனைவருக்குமானதாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது. எதிர்கால தொழிநுட்பம் குறித்த ஒரு சுருக்கமான பார்வையை தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் Internet of Things (IoT) செயலமர்வுகளை நடத்துவதற்கான பொருத்தமான இடமாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது. அதிவேக 4ஜி மொபிடெல் இணைய இணைப்புடன் ´விளையாட்டு திடல்´ என்பது மக்களை அதிகளவு கவர்ந்த இடங்களில் ஒன்றாக இருந்தது. அதிகளவான இளைஞர்கள் மாத்திரமன்றி, முதியவர்களும் இங்கு விஜயம் செய்தனர். சிரேஷ்ட சுகாதார சேவை வழங்குனர்கள் ஊடாக தமது கண் பார்வை, இரத்தத்தில் சீனியின் அளவு மற்றும் இரத்த அழுத்தங்களை பரிசோதித்துக் கொள்ளும் வசதிகளைக் கொண்டிருந்தமையால் முதியோரின் வருகையையும் பதிவு செய்தது. தமது வாழ்வைக் கொண்டாடக் கூடிய அன்பளிப்புக்கள் மற்றும் வெகுமதிகளைப் பெறக் கூடிய அனைத்து இலங்கையர்களுக்குமான ஒரு நிகழ்வாக மொபிடெல் கேஷ் பொனான்ஸா உள்ளது.

நிலைத்திருக்கும் தன்மை என்ற அம்சத்தின் ஊடாக மொபிடெல் கேஷ் பொனான்ஸா விளக்கப்படுகின்றது. தமது பெருநிறுவன சமூகப் பொறுப்பு முன்னெடுப்பின் ஒரு அங்கமாக மொபிடெல்லினால் இலவச கண் பரிசோதனை நிலையத்தையும் மொபிடெல் ஒழுங்கு செய்திருந்தது. முன்னணி கண் பரிசோதனை நிலையங்களால், சுமார் ஆயிரம் மூக்குக் கண்ணாடிகள் உபகார வாடிக்கையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. இந்த நிகழ்வின் போது தேசிய அடையாள அட்டைக்கு விண்ணிப்பதற்கான சந்தர்ப்பமும், புதுருளிய மக்களுக்கு கிடைத்தது.

மொபிடெல் வாடிக்கையாளர்களுக்கான மீள்நிரப்பல், மீள்சேர்த்தல் மற்றும் கட்டணம் செலுத்தல் சார்ந்த நிகழ்வாக கேஷ் பொனான்ஸா உள்ளது. தாம் மீள்நிரப்பு அல்லது கட்டணமாக செலுத்தும் ஒவ்வொரு 50 ரூபாயிற்கும் வெற்றி பெறுவதற்கான சந்தர்ப்பத்தை பெறும் மொபிடெல் கேஷ் பொனான்ஸாவிற்கு மொபிடெல் முற்கொடுப்பனவு, பிற்கொடுப்பனவு மற்றும் இணைய இணைப்பு வாடிக்கையாளர்கள் தகுதி பெறுகின்றனர். இதற்கான தனியான விண்ணப்பித்தல் நடைமுறை இல்லை. அனைத்து மொபிடெல் வாடிக்கையாளர்களும் இந்த குலுக்கலுக்கு நேரடியாக தகுதி பெறுவர். நாளாந்த பணப்பரிசு, முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் பேசும் நேரம், டேட்டா போன்றவற்றையும், பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் தமது கட்டணத்தில் கழிவு போன்றவற்றையும் பெறுவர். மொபிடெல்லின் வாடிக்கையாளர் சேவையான 071 27 55 777 என்ற இலக்கத்தின் ஊடாகவும், எழுத்து மூலம் தபாலிலும் மாத்திரமே வெற்றியாளருக்கு அறிவிக்கப்படும். தாம் பெற்ற பரிசுக்காக மேலதிக கட்டணங்கள் எதுவும் வாடிக்கையாளர்களிடம் இருந்து அறவிடப்படமாட்டாது.