Back to Top

ஹாட்டல்களில் தங்குவதற்கு கொமர்ஷல் வங்கியின் கடனட்டைகளுக்கு 50 சதவீதம் வரை விலைக்கழிவு

ஹாட்டல்களில் தங்குவதற்கு கொமர்ஷல் வங்கியின் கடனட்டைகளுக்கு 50 சதவீதம் வரை விலைக்கழிவு

March 11, 2019  04:26 pm

Bookmark and Share
கொமர்ஷல் வங்கியின் கடனட்டைகளை வைத்திருப்போர், நாடு முழுவதிலுமுள்ள ஹோட்டல்களில் தங்கள் விடுமுறைகளைக் களிக்கும் போது, தங்குமிடத்துக்கான கட்டணத்தில் 50 சதவீதம் வரை கட்டணக் கழிவைப் பெற்றுக் கொள்ள முடியும். கொமர்ஷல் வங்கியின் ´இலகுவான விடுமுறை´ (Easy Vacation) என்ற ஊக்குவிப்புத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளதைத் தொடர்ந்தே இவ்வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த ஊக்குவிப்புத் திட்டம், மார்ச் மாத இறுதிவரை நீடிக்கவுள்ளதுடன், சிலாபத்திலும் பாசிக்குடாவிலுமுள்ள அனந்தயாறி சோர்ட் அன்ட் ஸ்பா, நீர்கொழும்பிலுள்ள சி, வஸ்கடுவவிலும் ஹிக்கடுவவிலுமுள்ள சிட்ரஸ், யாலவிலுள்ள எலிபன்ட் றீச், எல்லவிலுள்ள ஜங்கிள் றிசோர்ட், வஸ்கமுவவிலுள்ள ஃபார்க்றைபுட்டிக் றிசோர்ட், யாலவிலுள்ள த பீச் காம்ப், அயனாசீ, நுவரெலியாவிலும் நிலாவெளியிலும் பாசிக்குடாவிலுமுள்ள அனிலான, பாசிக்குடாவிலுள்ள சண் அக்குவா ஆகியன உள்ளிட்ட கொமர்ஷல் வங்கியுடன் பங்காண்மையைக் கொண்டுள்ள 14 ஹோட்டல்களில் தங்குவதற்கான வாய்ப்பை இத்திட்டம் வழங்குகிறது.

அதேபோல், விஸா, மாஸ்டர்கார்ட், யூனியன்பே ஆகியவற்றால் பூகோள ரீதியாக நடத்தப்படும் ஊக்குவிப்புத் திட்டங்களிலும், ´கொம்பாங்க் மக்ஸ் லோயல்டி வெகுமதிப் புள்ளிகள்´ திட்டத்தின் கீழும் மேலதிக சலுகைகளையும், கொமர்ஷல் வங்கியின் கார்ட்களின் பாவனையாளர்கள் பெறுவதற்கு உரித்துடையவர்களாவர்.

கொமர்ஷல் வங்கியின் கடனட்டைகளும் டெபிட் அட்டைகளும், வருடம் முழுவதற்குமான பல்வேறு வகையான சேவைகளுக்கான ஊக்குவிப்புகளை வழங்குகின்றன. மக்ஸ் லோயல்டி வெகுமதித் திட்டத்தின் கீழ், கடனட்டைகளுக்கும் டெபிட் அட்டைகளுக்கும் வெகுமதிப் புள்ளிகளை வழங்கிய முதலாவது வங்கி, கொமர்ஷல் வங்கியாகும். அதேபோல், வழக்கமாகக் கடனட்டைகளுக்கு மாத்திரம் வழங்கப்படும் ஊக்குவிப்பு விலைக் கழிவுகளை, டெபிட் அட்டைகளுக்கும் வழங்கியதில், கொமர்ஷல் வங்கியே முன்னோடிகள் ஆகும்.

கொமர்ஷல் வங்கியின் கார்ட்களே, இலங்கையில் வேகமாக வளர்ந்துவரும் கார்ட்களாக உள்ளதோடு, விற்பனைப் புள்ளியில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் கார்ட்களில், கடனட்டைகள், டெபிட் கார்ட்கள் ஆகியன ஒட்டு மொத்தமாக, முதல் நிலையிலும் உள்ளன. கிளாஸிக், கோல்ட், பிளாட்டினம் ஆகிய வகைகளில், விஸா, மாஸ்டர் கார்ட் ஆகிய கார்ட்களை வங்கி வழங்குவதோடு, யூனியன் பேகார்ட்களில் கோல்ட், பிளாட்டினம் ஆகிய வகைகளையும், விஸா சிக்னேச்சர், வேர்ள்ட் மாஸ்டர்கார்ட், விஸா இன்ஃபினிட், யூனியன் பேடய மொன்ட் கார்ட்கள் ஆகியவற்றை, உச்ச நிலையில் வழங்குகின்றது.

இந்தக் கார்ட்கள் ‘Tap n Go’ NFC தொழில்நுட்பத்துடன் காணப்படுவதுடன், பலமான NFC விற்பனைப் புள்ளி வலையமைப்பால் பலமளிக்கப்படுகின்றன.

உலகின் முதல் 1,000 வங்கிகள் என்ற பட்டியலில், தொடர்ச்சியாக 8 ஆண்டுகள் இடம்பிடித்த இலங்கையின் ஒரே வங்கியான கொமர்ஷல் வங்கி, இலங்கையில் 266 கிளைகளையும் 830 ஏ.டி.எம்-களையும் இயக்குகிறது. கொமர்ஷல் வங்கி, 2016 ஆம் ஆண்டிலும் 2017 ஆம் ஆண்டிலும், சர்வதேச, உள்ளூர் விருதுகள் என, பல்வேறு விருதுகளை வென்றிருந்ததோடு, 2018 ஆம் ஆண்டில், 30க்கும் மேற்பட்ட சர்வதேச, உள்ளூர் விருதுகளை வென்றிருந்தது.

Most Viewed