Back to Top

துபாயில் நாணயமாற்று பங்காளர் இல்லங்களின் ஊழியர்களுக்கு கொமர்ஷல் வங்கி நடத்திய இரண்டு நாள் செயலமர்வு

துபாயில் நாணயமாற்று பங்காளர் இல்லங்களின் ஊழியர்களுக்கு கொமர்ஷல் வங்கி நடத்திய இரண்டு நாள் செயலமர்வு

March 11, 2019  04:34 pm

Bookmark and Share
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நாணயமாற்று இல்லங்களின் இலங்கை பங்காளி ஊழியர்களுக்கு கொமர்ஷல் வங்கி அண்மையில் இரண்டு நாள் செயலமர்வு ஒன்றை நடத்தியது. அங்குள்ள இலங்கையர்கள் தமது பணத்தை இந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பதில் இந்த ஊழியர்கள் செலுத்தும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த செயலமர்வு இடம்பெற்றது.

துபாயில் உள்ள றெட்டிஸன் புளு ஹோட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வு ´முடியாதது என்று எதுவும் இல்லை : எதுவுமே முடியாததும் அல்ல´ எனும் தொனிப் பொருளில் இடம்பெற்றது. 130 பேர் இதில் பங்குபற்றினர். ஒரு வைத்தியராக இருந்து வாழ்வுப் போக்கை மாற்றும் ஊக்குவிப்புப் பேச்சாளராகியுள்ள டொக்டர் நியொமல் பாலசூரிய இந்நிகழ்வை நடத்தினார். தனது பங்காளி நிறுவனங்களுக்கும் அவற்றின் ஊழியர்களுக்கும் இதுவரை வேறு எந்த ஒரு வங்கியும் வழங்கியிராத உன்னதமான ஒரு விடயத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்நிகழ்வை ஏற்பாடு செய்ததாக வங்கி அறிவித்துள்ளது.

ஒவ்வொருவரும் தத்தமது வாழ்வில் நினைவில் வைத்திருந்து அன்றாடம் பின்பற்றி தமது வாழ்வை மேம்படுத்திக் கொள்ளக் கூடிய ஆலோசனை மற்றும் வழிகாட்டி என்பனவற்றை உள்ளடக்கியதாக இந்நிகழ்வு அமைந்திருந்தது. UAE இல் 200000 த்துக்கும் அதிகமான இலங்கையர்கள் பணிபுரிகின்றனர். நாட்டுக்கு வெளிநாட்டு உழைப்பின் மூலமான வருமானத்தை வழங்கும் முக்கியசந்தைப் பிரிவாக இது உள்ளது.

Most Viewed