Back to Top

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

March 12, 2019  06:59 pm

Bookmark and Share
புத்தளம் முள்ளிபுரம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் கடமையாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜமால்தீன் முஹம்மட் ஜெஸீம் தாக்கப்பட்டமையை கண்டித்து புத்தளம் பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று (13) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

ஒன்றினைந்த சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சங்கம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் புத்தளம் பிரதேச செயலாளர் சஞ்சீவனி வீரசேகர, புத்தளம் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் சம்பத் வீரசேகர, உட்பட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என புத்தளம் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அலுவல, வெளிக்கள அரச உத்தியோகத்தர்கள் பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.

திங்கட்கிழமை (11) குறித்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், முள்ளிபுரம் கிராமத்தில் உள்ள தனது அலுவலகத்தில் கடமையில் இருந்துள்ளார் எனவும், இதன்போது அங்கு வருகை தந்த பயனாளி ஒருவரை வரிசையில் வருகை தருமாறும் சமுர்த்தி உத்தியோகத்தர் கேட்டுள்ளார்.

இதன்போதே, அங்கு வருகை தந்த சமுர்த்தி பயனாளி ஒருவர், சமுர்த்தி உத்தியோகத்தரிடம் வாக்குவாத்ததில் ஈடுபட்டதுடன், அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான சமுர்த்தி உத்தியோகத்தர் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையை கண்டித்தும், தாக்குதல் நடத்திய சந்தேக நபரை உடனடியாக கைது செய்யுமாறு கோரியும் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதன்போது, "அரச உத்தியோகத்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்", "பொதுமக்களுக்கு சேவை செய்யும் அரச உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு வழங்குங்கள்" என இதுபோன்ற தமிழ், சிங்களம் மொழிகளில் வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்திக் கொண்டு, கோஷங்களையும் எழுப்பினர்.

(புத்தளம் நிருபர் ரஸ்மின்)

Most Viewed