Back to Top

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் விளக்கமறியலில்

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் விளக்கமறியலில்

March 14, 2019  11:28 am

Bookmark and Share
நேற்று கைது செய்யப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மகில் பண்டார தெஹிதெனிய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் 18ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது அமைதியற்ற முறையில் செயற்பட்டதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டார்.



குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.