Back to Top

‘Festival for Our Planet’ நிகழ்வுடன் அறிமுகமாவுள்ள NGage Goodvocacy

‘Festival for Our Planet’ நிகழ்வுடன் அறிமுகமாவுள்ள NGage Goodvocacy

March 14, 2019  04:26 pm

Bookmark and Share
இலங்கையின் முன்னணி சந்தைப்படுத்தல் தகவல் தொடர்பாடல் நிறுவனமான Bates Strategic Alliance தற்போது NGage Strategic Alliance நிறுவனமாக தமது சன்நாமத்தை மீளமைத்துள்ளது. இதனை ஒரு பொது வெளியீட்டாக அனைவருக்கும் அறியத்தரும் வகையில் சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்வொன்றை நடாத்த திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்வானது Race Course இற்கு அருகில் உள்ள Good Market இல் நாளை (சனிக்கிழமை 16.03.2019) மு.ப 10.00 மணிமுதல் பி.ப 6.00 வரை அறிவூட்டலுடன் கூடிய களிப்பூட்டல் நிகழ்வாக இடம்பெறவுள்ளது.

உலகலாவிய ரீதியில் சிறார்களினால் ´காலநிலை வேலைநிறுத்தம்´ எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படும் Climate Strike எனும் முந்தைய தின நிகழ்வுடன் இணைந்து சுய செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைக்கும் ஒரு நிகழ்வாக இது அரங்கேரவுள்ளது. ஒவ்வொரு வருடமும் இடம்பெறும் இக்காலநிலை மாற்றமானது திகைப்பூட்டும் வகையில் அமைந்துள்ளது. இப்பிரச்சனைக்கு சரியானதொரு தீர்வை முன்னிறுத்துமாறு வலியுறுத்தி 270ற்கும் அதிக நாடுகளில் உள்ள மாணவர்கள் உலகலாவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அதனை வரவேற்கும் வகையில் அதற்கடுத்தநாள் இடம்பெறவுள்ள இந்நிகழ்வானது ´‘Festival of our planet’ எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெறவுள்ளது. இதில் சுற்றுச்சூழல் முகாமைத்துவம் மற்றும் காலநிலை மாற்ற சவால்கள் என்பன தொடர்பில் கவனஞ்செலுத்துவதன் ஊடாக உயரிய சமூகத்தை உருவாக்குதல் மற்றும் நிலையான மதிப்பீட்டை பெறல் போன்றவறறை நோக்கமாக கொண்டு இடம்பெறவுள்ளது.

இதில் சுற்றுச்சூழல் தொடர்பான முன்னணி செயற்பாட்டாளர்கள் மற்றும் பேச்சாளர்கள் கலந்துச் சிறப்பிக்கவுள்ளதுடன், புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம், சமுத்திரங்கள், வசிப்பிடங்கள், நீர் மற்றும் காற்று ஆகியவற்றை மாசுபடுத்துவதன் மூலம் ஏற்படும் சுற்றுச்சூழல் சீரழிவை தடுத்தல், நமது வனப்பகுதிகள், மழைக்காடுகளின் பல்லுயிரினங்களையும், பாரம்பரிய யானைகளையும், திமிங்கலங்களையும் பாதுகாத்தல், படிம எரிபொருட்களை புதுப்பித்தலுக்கான தீர்வுகளை பரிந்துரைத்தல், உற்பத்தி, நுகர்வு மற்றும் நகரங்களின் வளர்ச்சி, சுற்றுச்சூழல்-ஸ்மார்ட் நடைமுறைகள், இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் நிலையான மேலாண்மை போன்றன தொடர்பில் தம் அனுபவத்தினையும் அறிவினையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.

தமது புதிய சன்நாமம் மற்றும் இந்நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த NGage Strategic Alliance நிறுவனத்தின் ஸ்தாபகரும் தலைவருமான நிமல் குணவர்தன ´எம் பூமி முகங்கொடுத்துள்ள தீவிர பேண்தகைமை சவால்கள் தொடர்பில் நாம் கவனஞ்செலுத்த வேண்டியது அவசியம். சந்தைப்படுத்துனர்களாக நாம் சந்தைப்படுத்தும் தயாரிப்புக்களானது ஒழுங்குநெறிக்குட்பட்டதாகவும் பொறுப்புடைமையுடன் கூடியதாக அமையவேண்டும் என்பதனை அடிப்படையாக கொண்டு கடந்த நூற்றாண்டுகளிலேயே நாம் எமது தயாரிப்புக்களை நுகர்வோர் கலாச்சாரத்திலிருந்து நூதன கலாசாரத்திற்கு மாற்றிவிட்டோம். தகவல் தொடர்பாளர்களாக நாம் சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஒற்றுமை தொடர்பில் அக்கறை செலுத்தும் செயற்றிட்டங்களை மேற்கொள்வது இலங்கை குடிமகனாகிய எம் ஒவ்வொருவரினதும் நிறுவனரீதியிலான மற்றும் தனிமனித கடமையாகும்.´ எனக் கூறினார்.

இந்நிகழ்வில் கருத்தரங்குகள் மாத்திரமன்றி இசை நிகழ்வுடன் கூடிய கல்விசார் மற்றும் களிப்பூட்டும் நிகழ்வுகள், சுற்றுச்சூழல் தொடர்பான காணொலிகள் மற்றும் திரைப்படங்கள், சித்திரம் வரைதல், தகவல் பதாதைகளின் கண்காட்சி, புதிர்ப் போட்டி என்பன காலை முதல் மாலை வரை இடம்பெறவுள்ளன.

பசுமை நாட்டிற்கான சூழல் பாதுகாப்பின் நிலையான தீர்வுகளை வழங்கும் சுற்றுசூழல் அறக்கட்டளை குழுமத்தின் கீழ் செயற்படும் Good Market உடன் இணைந்து நடாத்தும் இந்நிகழ்வானது Race course இல் நடைபெறவுள்ளது.