Back to Top

புதையல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

புதையல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

March 15, 2019  09:58 am

Bookmark and Share
ஹினிதும பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்கல்ல, தலங்கம பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் புதையல் பெறும் நோக்கில் அகழ்வில் ஈடுபட்ட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை ஹினிதும பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.

14, 21, 25 மற்றும் 75 வயதுடைய சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் தங்காலை, மீகொட மற்றும் கடுவலை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், ஹினிதும பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.