Back to Top

மோசடியாக நீர் பெற்றுக் கொண்ட இருவர் கைது

மோசடியாக நீர் பெற்றுக் கொண்ட இருவர் கைது

March 15, 2019  03:34 pm

Bookmark and Share
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் களஞ்சியத்தில் இருந்து சட்டவிரோதமாக நீர் விநியோகம் பெற்ற இரண்டு பேர் பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு சொந்தமான பண்டாரகம நீர் தாங்கியில் இருந்து பல காலங்களாக இரகசியமான முறையில் நீர் விநியோகம் செய்யப்படுவதாக கிடைத்த தகவலுக்கமைய நேற்று இரவு சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.

சுற்றிவளைப்பு நடத்தப்பட்ட போது பாணந்துறை பிரதேச தனியார் நிறுவனம் ஒன்றின் 03 பவுசர்களுக்கு சட்டவிரோதமாக நீர் நிரப்பப்பட்டுக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது மூன்று பவுசர்களும் 02 சாரதிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், ஒரு சாரதி தப்பிச் சென்றுள்ளார்.

இந்த ஒரு பவுசரில் சுமார் 13,000 லீட்டர் நீர் விநியோகம் செய்ய முடியும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.