Back to Top

ஜா-எல பிரதேசத்தில் 16 கிலோ ஹெராயின் போதைப் பொருளுடன் 2 பேர் கைது

ஜா-எல பிரதேசத்தில் 16 கிலோ ஹெராயின் போதைப் பொருளுடன் 2 பேர் கைது

March 15, 2019  06:55 pm

Bookmark and Share
ஜா-எல, ​வெலிகம்பிட்டிய பிரதேசத்தில் ஒரு தொகை வெவ்வேறு வகையான போதைப் பொருட்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 16 கிலோ கிராம் ஹெரோயின், 5 கிலோ கிராம் ஹேஷீஸ், ஒரு கிலோகிராம் ஐஸ் போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் 4 துப்பாக்கிகளும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் படி நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் கார் ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு வத்தளை ஹேகித்த வீதி பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Viewed