Back to Top

 ஐதராபாத்தின் அதிரடியை சமாளிக்குமா பஞ்சாப்?

ஐதராபாத்தின் அதிரடியை சமாளிக்குமா பஞ்சாப்?

April 8, 2019  02:05 pm

Bookmark and Share
ஐ.பி.எல். போட்டியில் 22 வது ‘லீக்’ ஆட்டம் மொகாலியில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளுமே 5 ஆட்டத்தில் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளன. இதனால் 4 வது வெற்றி யாருக்கு? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் கடைசியாக விளையாடிய ஆட்டத்தில் தோற்று இருந்தது. எனவே வெற்றிக்காக கடுமையாக போராடும்.

அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி ராஜஸ்தான் (14 ஓட்டங்கள்), மும்பை (8 விக்கெட்), டெல்லியை (14 ஓட்டங்கள்) வீழ்த்தி இருந்தது. கொல்கத்தா (28 ஓட்டங்கள்), சென்னை (22 ஓட்டங்கள்) அணிகளிடம் தோற்று இருந்தது.

ஐதராபாத் அணி ராஜஸ்தான் (5 விக்கெட்), பெங்களூர் (118 ஓட்டங்கள்), டெல்லியை (5 விக்கெட்) தோற்கடித்து இருந்தது. கொல்கத்தா (6 விக்கெட்), மும்பை (40 ஓட்டங்கள்) அணிகளிடம் தோற்று இருந்தது.