Back to Top

தேயிலை கொழுந்து பறிக்க சென்ற பெண் தொழிலாளி மரணம்

தேயிலை கொழுந்து பறிக்க சென்ற பெண் தொழிலாளி மரணம்

April 8, 2019  03:39 pm

Bookmark and Share
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை மேல் பிரிவு தோட்ட பகுதியில் உள்ள பெண் தொழிலாளி ஒருவர் தேயிலை கொழுந்து பறிக்க சென்ற வேளை தவறி விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (08) காலை 8.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் தொழிலாளி தேயிலை கொழுந்து பறிப்பதற்காக சாஞ்சிமலை மேல் பிரிவு தோட்ட பகுதியில் உள்ள 09 ஆம் இலக்க தேயிலை மலைக்கு சென்று கொண்டிருந்த வேளையிலே திடீரென தவறி விழுந்துள்ளதாகவும் குறித்த பெண் தொழிலாளியை டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு முச்சக்கர வண்டியில் கொண்டு வந்த போது அவர் உயிரிழந்திருந்ததாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

உயிரிழந்த பெண் தொழிலாளி டிக்கோயா சாஞ்சிமலை மேல் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 58 வயதுடைய 3 பிள்ளைகளின் தாய் எனவும் அங்காய் என்ற பெண் தொழிலாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

(மலையக நிருபர் சதீஸ்குமார்)

Most Viewed