Back to Top

'கோடை வந்துவிட்டது' என்ற ஊக்குவிப்புடன் இப் புதுவருடத்தை சிறப்பிக்கும் ஹமீடியா

'கோடை வந்துவிட்டது' என்ற ஊக்குவிப்புடன் இப் புதுவருடத்தை சிறப்பிக்கும் ஹமீடியா

April 10, 2019  08:42 am

Bookmark and Share
பிறக்கும் புத்தாண்டானது ஹமீடியாவின் வெகுமதிகளால் சுபீட்சமான ஆண்டாக ஆரம்பமாகப் போகின்றது. புத்தாண்டு கொண்டாட்டங்களை மேலும் அதிகரிக்கும் விதத்தில் பிரத்தியேகமான வெகுமதிகள், கடனட்டைகள் மீதான விலைக்கழிவுகள் மற்றும் புத்தம்புதிய புத்தாண்டு (அவுருது) ஆடைத் தெரிவுகளை ஹமீடியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது.

அனைத்து விதமான ஆடைகள், பாதணிகள் மற்றும் அணிகலன்களையும் விற்பனை செய்கின்ற அதேநேரத்தில் நவநாகரிகம் மற்றும் தரம் என்பவற்றுடன் பின்னிப்பிணைந்த முன்னணி ஆடவர் ஆடை வர்த்தகக் குறியீடாக திகழும் ஹமீடியா, இந்தப் புதுவருட காலத்தில் பெருமளவிலான கொடுக்கல் வாங்கல் வெகுமானங்களை தம்வசம் வைத்திருக்கின்றது.

2019 ஏப்ரல் மாதத்தில் ´சுரண்டுங்கள் - வெல்லுங்கள்´ என்ற வியாபார ஊக்குவிப்புத் திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகளை வழங்குகின்றது. இதன்படி, ரூபா 7,500 இற்கு அதிகமாக கொள்வனவை மேற்கொள்கின்ற வடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சுரண்டும் அட்டையானது அவர்கள் அற்புதமான பரிசுகளை வெற்றி கொள்வதற்கு தகுதியுடையோராக அவர்களை ஆக்குகின்றது.

இதற்கு மேலதிகமாக, கட்டணப் பட்டியலின் மொத்தப் பெறுமதியானது மேற்குறிப்பிட்ட தொகையை விடவும் ஒவ்வொரு தடவையும் ரூபா 5,000 அதிகரிக்கும் போது வாடிக்கையாளர்கள் மேலதிகமாக இன்னும் சுரண்டும் அட்டைகளைப் பெற்றுக் கொள்வார்கள். அத்துடன், இப் பண்டிகைக் காலத்தில் நாடெங்கும் அமைந்துள்ள ஹமீடியா காட்சியறைகளில் வங்கி அட்டைகளுக்கான பிரத்தியேக வெகுமதிகளும் கிடைக்கக் கூடியதாக இருக்கின்றது.

மேலும், வெள்ளவத்தையில் உள்ள ஹமீடியாவின் முதன்மைக் காட்சியறையில் ´அலங்கார மேடை´ தொனிப்பொருளிலான (Thrones themed) புகைப்பட கூடங்கள் தொடர்பான வேடிக்கை செயற்பாட்டுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இங்கு வாடிக்கையாளர்கள் மனமகிழ்வான அனுபவத்தைப் பெறவும் புகைப்படங்களை எடுக்கவும் முடியும்.

ஹமீடியா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பௌசுல் ஹமீட் கூறுகையில், ´புத்தாண்டு பண்டிகைக் காலத்திற்காக எப்போதுமே ஹமீடியா மிகுந்த உற்சாகத்துடன் தன்னை தயார்படுத்திக் கொள்கின்றது. ஏனெனில், அது வருடத்தின் சிறப்பானதொரு காலப் பகுதியாக காணப்படுவதுடன், அந்நேரத்தில் குடும்பங்கள் ஒன்றாக இணைவதுடன் ஒவ்வொருவரும் தமக்கிடையே பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதற்காக அன்பளிப்புக்களைக் கொள்வனவு செய்கின்றனர். இந்த அடிப்படையிலேயே, ஒவ்வொருவரும் வெற்றியாளராகும் விதத்தில் இந்த வேடிக்கையான விற்பனை ஊக்குவிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்துவது அவசியம் என்று நாம் உணர்ந்து கொண்டோம். இப் பண்டிகைக்கால கொண்டாட்டங்களுக்கு நவ நாகரிகத்தையும் மனமகிழ்ச்சியையும் சேர்க்க முடிந்ததையிட்டு உண்மையிலேயே நாம் மிகவும் சந்தோசமடைகின்றோம்´ என்று தெரிவித்தார்.

Most Viewed