Back to Top

சட்டவிரோத மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட  6 பேர் கைது

சட்டவிரோத மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது

April 10, 2019  10:28 am

Bookmark and Share
பொகவந்தலாவ, பெற்றௌசோ - டெவன்போல் தோட்ட பகுதியில் பாரிய மாணிக்கல் சுரங்க குழிகள் அகழபட்டு மாணிக்ககல் தோண்டிய 6 பேர் பொகவந்தலாவ பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளனர்.

இன்று (10) அதிகாலை 1 மணி அளவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்திசெல்லம் பெற்றௌசோ - கேசல்கமுவ ஒயாவின் கிளை ஆறு ஒன்றின் அருமையிலே உள்ள புல் காண் ஒன்றிலே இந்த மாணிக்கல் அகழ்வு இடம்பெற்று வந்துள்ளது.

பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த சந்தேக நபர்கள் 6 பேரும் கைது செய்யபட்டுள்ளதாகவும் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட உபகரணங்களும் ஒரு தொகை மண் வகைகளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யபட்ட சந்தேக நபர்கள் 6 பேரும் பொகவந்தலாவ, பெற்றௌசோ - டெவன்போல் தோட்ட பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் கைது செய்யபட்ட சந்தேகநபர்கள் 6 பேரும் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(மலையக நிருபர் சதீஸ்குமார்)