Back to Top

வீதியில் பயணித்த நபர்  மீது கார் மோதியதில் ஒருவர் பலி

வீதியில் பயணித்த நபர் மீது கார் மோதியதில் ஒருவர் பலி

April 10, 2019  10:37 am

Bookmark and Share
நீர்கொழும்பு - சிலாபம் பிரதான வீதியின் பெரியமுல்ல பகுதியில் நேற்று (09) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

50 வயதுடைய நபர் ஒருவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற இரவு சிலாபத்தை நோக்கிப் பயணித்த கார் ஒன்று, வீதியில் பயணித்த நபர் ஒருவர் மீது மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த நபரை அங்கிருந்தவர்கள் உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(புத்தளம் நிருபர் ரஸ்மின்)

Most Viewed