Back to Top

DFCC வங்கி இம்முறை தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மரநடுகை செய்திடும் தேசிய முன்னெடுப்புக்கு ஆதரவளிக்கிறது

DFCC வங்கி இம்முறை தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மரநடுகை செய்திடும் தேசிய முன்னெடுப்புக்கு ஆதரவளிக்கிறது

April 10, 2019  04:39 pm

Bookmark and Share
அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் நோக்கத்துக்கு அமைய இம்முறை தமிழ் சிங்கள புத்தாண்டு சடங்குகளுள் நாடு முழுவதும் மரங்களை நடும் ´மர நடுகைக்கான சுபநேரம்´ எனும் புதிய சடங்கினை அறிமுகப்படுத்துகிறது. அதற்கமைய எதிர்வரும் 15ஆம் திகதி வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்தன்று காலை 11.17 க்கு இச்சடங்குக்கான சுபநேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த அர்த்தமுள்ள பெறுமதிமிக்க பணிக்கு தெரிவு செய்யப்பட்ட DFCC வங்கிக்கிளைகளில் ஏப்ரல் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் நடைமுறைக்கணக்கு தவிர்ந்த எந்தவொரு சேமிப்புக் கணக்குக்கும் எந்தவொரு தொகையையும் வைப்பிலிடும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சடங்குக்கான தாவரம் வழங்கப்படும். இத்தாவரங்கள் வழங்கப்படும் செயற்பாடானது முதலில் வருவோருக்கு முதலில் சேவை என்ற அடிப்படையில் வழங்கப்படும்.

DFCC வங்கியின் பிரதான நிறைவேற்று அதிகாரியான திரு. லக்ஷ்மன் சில்வா கருத்து தெரிவிக்கையில், ´சுற்றுச் சூழல் மீது அக்கறை செலுத்தும் இப்புதிய மரநடுகை முன்னெடுப்பானது நாட்டின் மிகப்பெரிய கொண்டாட்டமான தமிழ் சிங்கள வருடப்பிறப்பின் போது நிகழ்த்தவிருப்பது உண்மையில் குறிப்பிடத்தக்கதோர் விடயமாகும். எதிர்கால தலைமுறையினருக்கு பல அனுகூலங்களை வழங்கிடும் இந்த மரநடுகை நிகழ்வானது மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்பட சிறந்த சந்தர்ப்பத்தினை வழங்குகிறது. DFCC வங்கி ஏற்கனவே எமது தேசத்தை பசுமையாக்கிடும் தேவையை கருத்திற்கொண்டு மரபுவழி மற்றும் எமது நாட்டுக்கே உரித்தான மரங்களை வளர்த்திட நீண்ட கால நிலையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதிமேதகு ஜனாதிபதியின் இம்முன்னெடுப்பின் மூலம் வரவிருக்கும் இப்புதுவருடம் அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் பசுமை நிறைந்த வருடமாக திகழ்ந்திடும் என்பதை உறுதி செய்வதுடன் இத்தேசம் சார்ந்த முன்னெடுப்பினில் பங்குகொள்ள அனைத்து வாடிக்கையாளர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.´

அண்மையில் DFCC வங்கியானது இலங்கையின் காடுகளை பாதுகாக்கவும் காட்டுப்பகுதியை நீட்டிக்கவும் செயல்படும் இலாப நோக்கமற்ற சங்கமான Reforest Sri Lanka உடன் கூட்டிணைந்தது. அத்தோடு வங்கியானது வங்கி ஊழியர்களின் மரநடுகை முன்னெடுப்பினையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு வங்கி ஊழியரினதும் பிறந்த நாளின் போதும் அதை கொண்டாடிடும் வகையில் ஒரு மரம் நடப்படும். இம்மரம் நட்டப்பட்ட பின்னe-tree Press Release dedication சான்றிதழ் வழங்கப்படும். மரநடுகை திட்டம் மேற்கொண்ட பின்னர் மரம் நட்டப்பட்டுள்ள சரியான இடத்தை அறிந்துகொள்ள கூகுள் வரைபடம் மூலம் அதற்கான லிங்க் அனுப்பப்படும். இந்த மரநடுகை நிகழ்வுகளானது வங்கி ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பிரதேச வாசிகள் என பலரும் ஒன்றிணைந்து கலந்துகொண்டு வங்கியின் இம்முன்னெடுப்பினை ஆதரிக்கின்றனர். இவ்வாறு நடப்படும் மரங்கள் நாட்டின் முக்கியமான இடங்களில் மீள்காடாக்கம் செய்திட உதவிடும் என்பதுடன் எமது பூமிக்கு மீண்டும் அதிகமாக பல அனுகூலங்களையும் தந்திடும்.

DFCC வங்கி பற்றி....

DFCC வங்கி PLC வணிக ரீதியான அபிவிருத்தி வங்கி சேவைகளின் அனைத்து வசதிகளையும் வழங்கும் ஒரு முழுமையான வணிக வங்கியாகும். The Chartered Institute of Management Accountants (CIMA) மற்றும் International Chamber of Commerce of Sri Lanka (ICCSL) இணைந்து 2018 ஆம் ஆண்டின் “Most admired companies” எனப்படும் பத்து முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாக DFCC வங்கியை அறிவித்துள்ளது. DFCC வங்கியானது Business Today இன் இலங்கையின் முன்னணி 30 வர்த்தக நிறுவனங்களின் பட்டியலில் 14 வது இடத்தில் தேர்வு செய்யப்பட்டது. DFCC வங்கி Fitch Ratings Lanka Limited AA- (lka) மதிப்பிடப்பட்டுள்ளது. தனிநபர்கள் மற்றும் வர்த்தகர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் புத்தாக்கம் மிக்க பயனுள்ள மற்றும் கட்டுப்படியான நிதியியல் தயாரிப்புக்களையும் சேவைகளையும் வழங்குவதோடு கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள், கட்டமைக்கப்பட்ட மீள்கொடுப்பனவுத் திட்டங்கள், அனைத்துவிதமான நிதிக்குமான இலகுவான அணுகல், வேகமானதும் உடனடியானதுமான வாடிக்கையாளர் சேவை என்பவற்றையும் வழங்குவதில் பெருமையடைகிறது.

Most Viewed