Back to Top

மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் தாழிறக்கம்

மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் தாழிறக்கம்

April 11, 2019  08:56 am

Bookmark and Share
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நோர்வூட் நகரின் விகாரைக்கு அருகில் காணப்படும் குடியிருப்பு பகுதிகளில் தாழிறக்கம் ஏற்பட்டதில் அப்பிரதேசத்தில் உள்ள 2 வீடு பாதிக்கப்பட்டுள்ளன.

நோர்வூட் பகுதியில் கடந்த 2 நாட்களாக பிற்பகல் வேளையில் பெய்து வரும் மழை காரணமாகவே இத்தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பகுதியில் ஒரு வீட்டில் 2 அறைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, மற்றுமொரு வீட்டில் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது. அத்தோடு சுவர்களும் இடிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் உயிராபத்துகள் எதுவும் ஏற்படவில்லை எனவும், பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் இப்பிரதேச கிராம சேவகர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(மலையக நிருபர் கிரிஷாந்தன்)