Back to Top

சந்தை முன்னோடியாக 15 ஆவது தொடர்ச்சியான ஆண்டில் திகழும் செலிங்கோலைஃப் நிறுவனத்தின் 243 நட்சத்திரங்கள் கௌரவிக்கப்பட்டனர்

சந்தை முன்னோடியாக 15 ஆவது தொடர்ச்சியான ஆண்டில் திகழும் செலிங்கோலைஃப் நிறுவனத்தின் 243 நட்சத்திரங்கள் கௌரவிக்கப்பட்டனர்

April 11, 2019  09:34 am

Bookmark and Share
சந்தையில் தொடர்ச்சியான 15 ஆவது ஆண்டாக முன்னிலை வகித்து வரும் செலிங்கோலைஃப் நிறுவனம், அதன் மிகப் பிரமாண்டமான வருடாந்த விருது வழங்கல் விழாவை அண்மையில் கொண்டாடியது. நிறுவனத்தில் மிகச் சிறந்த திறமைகளை வெளிக்காட்டிய தொழில் வாண்மையாளர்களும் பணியாளர்களும், 415 திறமை வெளிப்பாட்டு விருதுகளால் கௌரவிக்கப்பட்டனர்.

இவ்விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் பிரதான மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதில், நடந்து முடிந்த ஆண்டுக்கான மில்லியன் டொலர் ரவுண்ட் டேபிள் (எம்.டி.ஆர்.டி) அங்கத்துவத்தை தொடர்ந்து தக்கவைத்திருக்கும் இன்னும் ஒரு சிறந்த பணியாளரின் பயன்பாட்டுக்காக, நிறுவனத்தால் பராமரிக்கப்படும் டொயோட்டா அக்ஸியோகார் வழங்கப்பட்டது. இதுவே இந்நிகழ்வின் உச்சகட்டமாக அமைந்தது. இலங்கையின் உள்நாட்டு ஆயுள் காப்புறுதிச் சந்தையில் முதன்முறையாக, 2018 ஆம் ஆண்டு செலிங்கோலைஃப் நிறுவனத்தால் இப்பரிசுமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. திறமையை வெளிப்படுத்திய பலருக்கு வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்கள், சான்றிதழ்கள், பதக்கங்கள், வெற்றிக் கிண்ணங்கள் ஆகியனவும் வழங்கப்பட்டன.

நாட்டின் சகல மாவட்டங்களையும் சேர்ந்த 280 கிளைகளையும் உள்ளடக்கிய பணியாளர்கள், விற்பனை ஆலோசகர்கள், பிரிவுத் தலைவர்கள், கிளைத் தலைவர்கள் என எல்லோரும், 2018 ஆம் ஆண்டில் நிகழ்த்தியுள்ள நிறுவனத்தின் சாதனை மற்றும் அடைந்துள்ள வெற்றி என்பனவற்றுக்காக கொளரவிக்கப்பட்டனர். சில சிறந்த செயற்பாட்டாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பல விருதுகளையும் வென்றனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய செலிங்கோலைஃப் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. துஷாரரணசிங்க, செலிங்கோ ஹவுஸில், வாடகைக்கு எடுக்கப்பட்ட இடமொன்றில் 1988 ஆம் ஆண்டு தனது பயணத்தை ஆரம்பித்ததிலிருந்து, 31 ஆண்டுகளாக விற்பனைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள தியாகங்களுக்கான பெறுமதியைக் குறிக்க முடியாது எனத் தெரிவித்தார்.

ஆரம்பிக்கப்பட்ட முதலாவது ஆண்டில், கட்டுபண வருமானமாக 6 மில்லியன் ரூபாய் காணப்பட்ட நிலையில், தற்போது 17.8 பில்லியன் ரூபாயாக உயர்ந்து, நிறுவனத்திற்கு சொந்தமான 35 கட்டடங்கள், நாடு முழுவதும் பரந்து விரிந்த வலையமைப்பு என்ற நிலையை, நிறுவனம் அடைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார். பிரித்தானியாவில் போர்க்காலத்தில் பிரதமராக இருந்தவின்ஸ்டன் சேர்ச்சில், ´வெற்றியென்பது இறுதியில்லை, தோல்வியென்பது முடிவில்லை, தொடர்வதற்கான அந்தத் தைரியம் தான் முக்கியமானது´ எனக் குறிப்பிட்டமையைக் காட்டி உரையாற்றிய அவர், ஆயுள் காப்புறுதி வெற்றியடைவதற்கு, காப்புறுதி விற்பனைப் பணியாளர்கள் உண்மையான நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டுமென்றார். விற்பனைப் பணியாளர்களுக்கான 300 க்கும் மேற்பட்ட வாகனக் கடன்களை வழங்குவதற்காக, ஒரு பில்லியன் ரூபாய்க்கும் மேற்பட்ட பணத்தை நிறுவனம் முதலிட்டிருப்பது, விற்பனைப் பணியாளர்கள் மீதும் அவர்களின் குடும்பங்கள் மீதும், செலிங்கோலைஃப் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது என, திரு. ரணசிங்க மேலும் தெரிவித்தார்.

இவ்வாண்டில் மில்லியன் டொலர்ரவுண் டேபிள் (எம்.டி.ஆர்.டி) மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்புப் பெற்ற 73 செலிங்கோலைஃப் விற்பனைப் படை ஊழியர்கள், அவர்களுள் மூன்று எம்.டி.ஆர்.டி உறுப்பினர்கள் ´கோர்ட் ஒஃப் டேபிள்´ அந்தஸ்தையும் பெற்றுள்ளனர். ஒரு எம்.டி.ஆர்.டி உறுப்பினர், டொப் ஒஃப் டேபிள் அந்தஸ்தைப் பெற்றுள்ளார். கம்பனிக்கே உரித்தான ´ஹை ஃபிளையர்ஸ்´ கிளப்பில் இணையும் அந்தஸ்தை 85 விற்பனை அதிகாரிகள் கடந்தாண்டில் பெற்றுக்கொண்டனர்.

இவ்வாண்டின் உயர் விருதுகளைப் பெற்றுக்கொண்டோர் விவரம் பின்வருமாறு:

ஒட்டு மொத்தமாக சிறந்த கிளைத் தலைவர் - திரு. ஏ.எஸ்.சமரசிங்க (நுகேகொடை 01 கிளை), சிறந்த கிளைத் தலைவி - திருமதி டி. ஷோபனா (நெல்லியடி 01 கிளை), ஒட்டு மொத்தமாக சிறந்த பிரிவுத் தலைவர் - திரு. எம்.ஜி.எஸ். வேரபிட்டிய (தெல்தெனிய 01 கிளை), சிறந்த பிரிவுத் தலைவி - திருமதி எஸ்.ஈ. தமிழரசி (வவுனியா 03 கிளை), ஒட்டு மொத்தமாக சிறந்த விற்பனை ஆலோசகர் - திரு. ஏ.ஐ.பி. மஞ்சுள (அம்பலாந்தோட்டை 02 கிளை), சிறந்த விற்பனை ஆலோசகர் (பெண்) - திருமதி. என்.எல். பெர்ணான்டோ (கொழும்புவடக்கு 01 கிளை).

டொயோட்டா அக்ஸியோகாரை வென்ற செலிங்கோலைஃப் வெற்றியாளர், நீர்கொழும்பு 01 கிளையைச் சேர்ந்த திரு. டபிள்யூ.எஸ்.ஆர். பெர்ணான்டோ ஆவார்.

2018 ஆம் ஆண்டின் முடிவில் செலிங்கோலைஃப் 118 பில்லியன் ரூபாய் சொத்துக்களைக் கொண்டுள்ளது. மொத்த வருமானம் 29.21 பில்லியன் ரூபாய், சந்தா வருமானம் 17.8 பில்லியன் ரூபாய், ஆயுள் நிதியம் 88.05 பில்லியன் ரூபாய், மூதலீட்டு சேவை 103 பில்லியன் ரூபாய்க்கும் அதிகம், தேறிய இலாபம் 5.79 பில்லியன் ரூபாயாகும்.

வேர்ள்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தால், இலங்கையின் மிகச் சிறந்த காப்புறுதி நிறுவனத்துக்கான விருதை, 5ஆவது தொடர்ச்சியான ஆண்டாகவும் 2018 ஆம் ஆண்டு வென்ற செலிங்கோலைஃப், SLIM-Nielsen நிறுவனத்தால் நாட்டின் மிகவும் பிரபலமான ஆயுள் காப்புறுதி நிறுவனமாக, தொடர்ச்சியாக 13 ஆண்டுகளாகத் தெரிவாகியுள்ளது. செலிங்கோலைஃப் செயற்பட்டுவரும் 31 ஆண்டுகளில் 15 ஆண்டுகளாக, நாட்டின் காப்புறுதித் துறையின் சந்தை முன்னோடியாகக் காணப்படுகிறது. செயற்படுநிலைக் காப்புறுதிக் கொள்கைகள் மூலமாக, கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வாழ்க்கைகளைக் காப்புறுதி செய்துள்ள நிறுவனம், புத்தாக்கம், உற்பத்தி ஆராய்ச்சியும் அபிவிருத்தியும், வாடிக்கையாளர் சேவை, தொழில்வாண்மை அபிவிருத்தி, கூட்டாண்மைச் சமூகப் பொறுப்பு ஆகியவற்றில், உள்ளூர் காப்புறுதித் துறையின் உயர்நிலை அளவுகோலாகக் கருதப்படுகிறது.

Most Viewed