Back to Top

புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக எமிரேட்ஸ் உணவுப் பட்டியலில் கொக்கீஸும் அல்வாவும்

புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக எமிரேட்ஸ் உணவுப் பட்டியலில் கொக்கீஸும் அல்வாவும்

April 11, 2019  02:53 pm

Bookmark and Share
உலகிலுள்ள மிகப் பெரிய விமான சேவைகளில் ஒன்றான எமிரேட்ஸ் நிறுவனமும், இலங்கையின் சிங்கள - தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் மாதத்தில் நடுப்பகுதியில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள எமிரேட்ஸ் ஓய்விடத்துக்குச் செல்லும் விருந்தினர்களுக்கு இலங்கையின் பாரம்பரிய உணவுகளைப் பரிமாறுவதற்காக அந்நிறுவனம் தயாராகி வருகிறது.

பூ அல்லது வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் அமைந்த பலகாரமான ´கொக்கீஸ்´, டயமன்ட் அல்லது சதுரவடிவில் அமைந்த அரிசிமாவினாலும் பாகுவினாலும் செய்யப்படும், சில வேளைகளில் முந்திரிப் பருப்பு அல்லது ஏலக்காய் வைக்கப்பட்டுச் செய்யப்படும் ´அல்வா´ ஆகியவற்றைத் தயாரிக்கும் முறையை, இலங்கைக்கே தனித்துவமான இந்தக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, சமையல் நிபுணர்கள் கற்று வருகின்றனர்.

சிங்கள - தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, ஏப்ரல் 13, 14 ஆம் திகதிகள் விடுமுறைகளாக உள்ள நிலையில், இந்த சமையல் நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட கொக்கீஸ், அல்வா ஆகியன, எமிரேட்ஸ் ஓய்விடத்தில் வழங்கப்படும். இதன் மூலமாக, இலங்கையர்களும் வெளிநாட்டவர்களும் இலங்கையை விட்டு வெளியேறும் போது, புத்தாண்டோடு சம்பந்தப்பட்ட இரண்டு பாரம்பரிய உணவுகளைச் சுவைக்கும் வாய்ப்பு ஏற்படவுள்ளது.

´மக்கள், கலாசாரங்கள், சமையல் பாணிகள் ஆகியவற்றை இணைக்கும் தனதுபாத்திரம் தொடர்பில், எமிரேட்ஸ் எப்போதும் பெருமை கொண்டிருக்கிறது. அத்தோடு, எமிரேட்ஸால் சேவையளிக்கப்படும் இடங்களுக்குத் தனித்துவமான உள்நாட்டு, பிராந்திய உணவுகளை வழங்கவும் அவற்றைக் கொண்டாடவும் சிரத்தையெடுத்துச் செயற்பட்டிருக்கிறது. எமிரேட்ஸில் முன்னெடுக்கப்படும் அதிககவனம், அனைவரையும் உள்வாங்கிச் செயற்படும் தன்மை ஆகியனவற்றுக்கான, இதயத்தை நெகிழச் செய்யும் இன்னோர் உதாரணம் இதுவாகும். இந்தச் செய்கையை எமது வாடிக்கையாளர்கள் மெச்சுவதோடு, அவர்களுக்காக எதிர்பார்த்துக் காத்திருக்கும் உணவுகளை அவர்கள் விரும்பி உண்பார்கள் என நாம் எதிர்பார்க்கிறோம்´ என, இலங்கைக்கும் மாலைதீவுகளுக்குமான எமிரேட்ஸின் முகாமையாளர் சந்தன டி சில்வா தெரிவித்தார்.

இலங்கையின் முக்கியமான உணவுப் பொருட்களில் ஒன்றாக கொக்கீஸ் மாறிவிட்டாலும் கூட, நெதர்லாந்துப் பின்னணியைக் கொண்டது என நம்பப்படுகிறது. கொக்கீஸ் என்ற சொல், நெதர்லாந்தில் ´குக்கீஸ்´ என்பதைக் குறிக்கப் பயன்படும் ´koekjes´ என்ற சொல்லிலிருந்து உருவாகியிருக்கக் கூடும். இலங்கையின் அல்வா என்ற உணவு, பல்வேறு வடிவங்களிலும் சுவைகளிலும் கிடைக்கப் பெறுவதோடு, அரிசிமா, கோதுமை ரவை, உருளைக்கிழங்கு அல்லது தேங்காய் ஆகியவற்றைக் கொண்டு இது மேற்கொள்ளப்பட்டு, பாகு அல்லது சீனியைக் கொண்டு இனிப்பாக்கப்பட்டு, இலங்கைக்கு உலகெங்கிலும் பெருமையைத் தேடித்தந்தன நறுமணப்பொருட்களைக் கொண்டு சுவை சேர்க்கப்பட முடியும்.

உலகம் முழுவதிலும் எமிரேட்ஸுக்குக் காணப்படும் தனித்தவிமான நிலைய ஓய்வீடங்கள் 42இல் ஒன்றான பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள எமிரேட்ஸ் ஓய்விடம், 2012 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட தோடு, முதல் வகுப்பு அல்லது வணிக வகுப்புப் பயணச்சீட்டுகளைக் கொண்ட அல்லது விமான சேவையின் விருதுகளை வென்ற தொடர் பயணியர் திட்டமான ஸ்கைவேர்ட்ஸின் பிளாட்டினம் அல்லது தங்க வகை உறுப்பினர்கள் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக உள்ளது. அனைத்து உணவுகளுக்கும் சூடானதும் குளிரானதுமான, விரும்பியளவு உண்ணும் உணவுத் தெரிவுகளை இது வழங்குவதோடு, உணவுக்குப் பின்னரான இனிப்பு வகைகளுக்கான தொகுதி, டில்மாவின் 6 வகையான தேநீரையும், மேலும் கோப்பியையும் வழங்கும் தொகுதி, சர்வதேசத் தொலைக்காட்சி அலைவரிசைகளில் அநேகமானவற்றை வழங்கும் தொலைக்காட்சிபார்க்கும் இடம், வணிக நிலையமொன்று, தனியாக வரையறுக்கப்பட்ட வழிபாட்டு அறை, குளியல் வசதிகள், மலசலகூட வசதிகள் ஆகியவற்றைக் கொண்டதாக, இந்த ஓய்விடம் அமைந்துள்ளது.

எமிரேட்ஸ் விமான சேவையானது, 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் இலங்கைக்கான சேவைகளை வழங்கி வருவதோடு, டுபாயிலுள்ள அதன் மையப் பகுதிக்காக வாராந்தம் 28 விமானங்களைச் செயற்படுத்தி, 6 கண்டங்களிலுள்ள 158 இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பை வழங்குகிறது.