Back to Top

Coca-Cola ஆனது ICC கிரிக்கட் உலகக் கிண்ண போட்டிகள் 2019 இற்காக தேசத்தை ஒன்று திரட்டுகிறது

Coca-Cola ஆனது ICC கிரிக்கட் உலகக் கிண்ண போட்டிகள் 2019 இற்காக தேசத்தை ஒன்று திரட்டுகிறது

April 11, 2019  03:08 pm

Bookmark and Share
ICC மற்றும் Coca-Cola அண்மையில் உலகப் புகழ்பெற்ற விளையாட்டுப் போட்டிகளுள் ஒன்றான கிரிக்கட் போட்டிகள் மற்றும் அதன் பிரீமியர் நிகழ்வுகளை கொண்டாடிட உலகளாவிய மூலோபாய கூட்டிணைவுக்குள் நுழைந்தது. இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ICC மற்றும் அதன் அனைத்து போட்டிகளுக்கும் தனித்துவம் வாய்ந்த அல்கஹோல் அற்ற குடிபான வகைப் பங்காளியாக Coca-Cola கம்பனியின் வர்த்தக நாமம் திகழ்ந்திடவிருக்கிறது.

உலகக் கிண்ணத்தை நோக்கிச் செல்லும் இந்த வேளையில் உலகக்கிண்ண போட்டிகள் 2019இல் தமது சாதனைகளை படைத்திட இலங்கை கிரிக்கட் அணியை ஊக்குவிப்பதற்காக இலங்கை முழுவதும் உள்ள தமது இரசிகர்களுக்கு ஒன்று திரளுமாறு Coca-Cola ஆனது “Drink of Togetherness” எனும் பிரச்சாரத் திட்டத்தின் மூலம் அழைப்பு விடுக்கிறது. ICC உலகக்கிண்ண போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் 2019 நேரடி அனுபவத்தை பெற வாய்ப்பளித்திட இலங்கையின் கிரிக்கட் இரசிகர்களுக்கு “From Cap to Cup” எனும் சலுகைத் திட்டத்தையும் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த கூட்டிணைவு பற்றிய தகவல்களை அண்மையில் Shangri-La ஹோட்டலில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டின் போது அறிவித்தது. Coca-Cola கம்பனியின் வலுவும் மற்றும் 500 க்கும் மேற்பட்ட பலவகைப்பட்ட வர்த்தக நாமங்களைக் கொண்டுள்ள போர்ட்போலியோவும் ICC உடனான இந்த கூட்டிணைவுடன் உலகளாவிய ரீதியில் விளையாட்டுத் துறையில் கால் பதித்திட வழிவகுப்பதுடன் அதனை பிரபலப்படுத்தவும் உதவுகிறது. அதுமட்டுமன்றி இரண்டு நிறுவனங்களுக்கும் மூலோபாய ரீதியாக இதுவோர் நீண்ட கால கூட்டிணைவாகவும் திகழ்ந்திடும்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கௌரவ. ஹரின் பர்னான்டோ இந்நிகழ்வைப்பற்;றி கருத்து தெரிவிக்கையில், ´கிரிக்கட் விளையாட்டானது நாட்டின் விளையாட்டு சார் இதயத்துடிப்பினை உருவாக்குகிறது. எதிவரும் ICC உலகக்கிண்ண போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் 2019இன் போது அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக வந்து எமது இலங்கை அணி வீரர்களை உற்சாகப்படுத்திட வேண்டும் என்பதற்காக இலங்கை கிரிக்கட் அணியை வாழ்த்திட இலங்கை கிரிக்கட் இரசிகர்களை ஒன்றாக அணிதிரட்டிடும்; ஊழஉய-ஊழடய வுக்கு நான் விஷேடமாக எனது நன்றிகளைத் தெரிவித்திட விரும்புகிறேன்.´

மேலும் இலங்கை கிரிக்கட் இன் நிர்வாகக் குழுவின் உதவிச் செயலாளர் - திரு. கிரிஷாந்த கபுவத்த Coca-Cola வின் இவ்வாதரவினைப் பற்றி கருத்து தெரிவிக்கையில், ´Coca-Cola இலங்கையின் கிரிக்கட் துறைக்கு வழங்கும் ஆதரவு நீண்ட கால வரலாற்றினை கொண்டுள்ளது. கம்பனி ரீதியாக மட்டுமன்றி உத்தியோகபூர்வ கார்பனேட் செய்யப்பட்ட குடிபானவகை அனுசரணையாளராகவும் திகழ்ந்து வருகிறது. 1996ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளின் வெற்றியின் போதும் உலகளாவிய பங்காளியாக Coca-Cola திகழ்ந்தது. அதுமட்டுமன்றி அடுத்த தலைமுறைக்கான கிரிக்கட் நட்சத்திரங்களை உருவாக்கிடும் Coca-Cola வின் நிகழ்ச்சித் திட்டங்கள் மூலம் இவ்விளையாட்டுத் துறைக்கும் அதன் அபிவிருத்திக்கும் இந்நிறுவனமானது பெரும் பங்களிப்பினை வழங்கியும் வருகிறது. இந்த பிரச்சாரத் திட்டத்தின் மூலம் Coca-Cola வுடன் ஒன்றாக இணைந்து செயற்பட்டு தேசிய கிரிக்கட் அணிக்கு எமது ஆரதவினை வழங்கிட நாம் காத்திருக்கிறோம்.´

இக்கூட்டிணைவினைப் பற்றி ICC யின் பிரதான நிறைவேற்று அதிகாரியான திரு. மனு சௌனி கருத்து தெரிவிக்கையில், ´நாம் Coca-Cola வுடன் கூட்டிணைந்து மகிழ்வதுடன் உலகெங்கிலுமுள்ள அதிகமான மக்களுக்கு கிரிக்கட் விளையாட்டு மீதான அன்பினை மேலும் அதிகப்படுத்துகிறோம். எதிர்வரும் ICC உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடவிருக்கும் இலங்கை கிரிக்கட் அணியினை உற்சாகப்படுத்திடவும் அதைக் கொண்டாடிடவும் அனைத்து பிராந்தியங்களிலுமுள்ள மக்களையும் இரசிகர்களையும் ஒன்று திரட்ட காத்திருக்கிறோம்.´

இந்நிகழ்வினைப் பற்றி Coca-Cola வின் உபதலைவர் - தென்மேற்கு ஆசிய தொழிற்பாடுகள், கருத்து தெரிவிக்கையில், ´கிரிக்கட் ஆனது ஒரு உலகளாவிய விளையாட்டு மற்றும் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் ஆர்வத்துடன் பகிர்ந்து கொள்ளும் ஓர் ஆர்வமிகு செயற்பாடும் ஆகும். பாலினம், தலைமுறைகள் மற்றும் கலாச்சாரங்கள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு இவ்விளையாட்டு மீதான காதல் மேலோங்குகிறது. உலகளாவிய ரீதியான விளையாட்டு போட்டிகளில் மற்றும் நிகழ்வுகளில் ICC உடனான எமது கூட்டிணைவுகள் சார்ந்த நீண்ட கால வரலாற்றினைக் கொண்டுள்ளது. இந்த மூலோபாய ரீதியான பங்காண்மையானது விளையாட்டு இரசிகர்களை புதுப்பிக்கும் மற்றும் அவர்களது பொழுதுபோக்கு அனுபவங்களை மேம்படுத்தும் எமது நீண்ட கால உறுதிப்பாட்டை வலுவூட்டுகிறது.´

இந்த கூட்டிணைவின் முதலாவது பகுதியாக, Under the Cap (UTC) எனும் பிரச்சாரம் மூலம் இலங்கையில் அறிமுகப்படுத்தியது. இதில் கலந்து கொள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் Coke, Sprite அல்லது Fanta வினை எடுத்து அதன் விஷேட மஞ்சள் நிற மூடியின் கீழுள்ள தனித்துவமான கோட் இலக்கத்தினை 2343 க்கு SMS செய்திட வேண்டும். இப்பிரச்சார காலத்தின் போது 30 அதிர்ஷ்ட வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு Coca-Cola Sri Lanka விடமிருந்து ICC உலகக்கிண்ண போட்டிகளில் பங்கு கொள்வதற்கான டிக்கட்டுக்கள் வழங்கப்படும். மேலதிகமாக, கம்பனியானது 600 ஸ்மார்ட் ஃபோன்களையும் வழங்கவிருக்கிறது. இது டிஜிட்டல் சீட்டிழுப்பின் மூலம் தெரிவு செய்யப்படும் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும். இதுவும் இப்பிரச்சார காலத்தின் போது இடம்பெறும். இப்பிரச்சாரம் 2019 ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஜூன் முதலாம் திகதி வரை இடம்பெறும்.

´நுகர்வோர் எப்போதும் Coca-Cola வின் போர்ட்போலியோவின் மையத்தில் உள்ளனர். நிறுவனமானது அவர்களின் விருப்பத் தேர்வுகளைப் பூர்த்தி செய்வதில் தீவிரமாக உள்ளது. எமது வர்த்தக நாமங்களுடன் மக்களை இணைக்க நாம் எப்போதும் புத்தாக்கமிக்க வழிகளை தெரிவு செய்கிறோம். எதி;வரும் ICC உலகக்கிண்ண போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் 2019இனை நேரடியாக கண்டு களிக்கவும் அவர்களை மகிழ்வித்திடவும் இக்கூட்டிணைவின் மூலம் நாம் எதிர்ப்பார்க்கிறோம். இதனால் விளையாட்டு மீதான காதல் மேலும் வளர உதவுவதுடன் இலங்கை நுகர்வோரையும் இது ஒன்றாக இணைக்கிறது.´ என Coca-Cola Sri Lanka Private Ltd வின் முகாமைத்துவப் பணிப்பாளர் பங்கஜ் சின்ஹா தெரிவித்தார்.

ICC உடனான இந்த ஐந்தாண்டு கால ஒப்பந்தமானது உலகம் முழுவதும் இடம்பெறும் ICC சுற்றுத் தொடர் போட்டிகளான இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் இல் இடம்பெறும் ICC உலகக்கிண்ண போட்டிகள், 2020 இல் அவுஸ்திரேலியாவில் இடம்பெறும் T20 உலகக்கிண்ண போட்டிகள், இனி வரவிருக்கும் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கட் உலகக்கிண்ண போட்டிகள், ICC பெண்களுக்கான உலகக்கிண்ண போட்டிகள் மற்றும் 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் இடம்பெறவிருக்கும் ICC உலகக்கிண்ண போட்டிகள் போன்றவற்றை உள்ளடக்குகின்றது. நிறுவனமானது 8 தசாப்தங்களுக்கும் மேற்பட்ட கூட்டிணைவினை ஒலிம்பிக்ஸ் உடன் பேணியதுடன் 4 தசாப்தங்களுக்கும் மேற்பட்ட கூட்டிணைவினை FIFA உடனும் 25 வருடகால தொடர்புகளை ரக்பி உலகக்கிண்ணம் உடனும் கொண்டிருந்தது. இக்கூட்டிணைவானது நுகர்வோரின் வாழ்க்கை மற்றும் அவர்களது விருப்பங்களுக்காக தம்மை அர்ப்பணித்திடும் கம்பனியின் தத்துவத்துக்கமைய அமைந்துள்ளது.