Back to Top

ஹட்டனில் பொலிஸார் அதிரடி சோதனை

ஹட்டனில் பொலிஸார் அதிரடி சோதனை

April 12, 2019  10:57 am

Bookmark and Share
ஹட்டன் நகரில் இரவு வேளைகளில் பொலிஸார் முன்னெடுத்த ரோந்து நடவடிக்கைகளின் போது பலரிடம் சோதனை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதுவருடம் என்பதால் வெளிமாவட்டங்களில் இருந்து ஹட்டன் பிரதேசத்திற்கு வரும் வாகன சாரதிகளிடம் சோதனை மேற்கொள்வது மற்றும் வாகனங்களை கவனமாக செலுத்த வேண்டும் போன்ற அறிவுரைகளை வழங்குவதற்காக இவ்வாறு ரோந்து பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த ரோந்து பணியின் போது சந்தேகத்துக்கிடமான முறையில் வீதியில் நடமாடுபவர்களை மறித்து பலத்த சோதனைகளுக்கு பின்னர் விடுவிக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

(மலையக நிருபர் கிரிஷாந்தன்)