Back to Top

வட மாகாண ஆளுனரின் புத்தாண்டு வாழ்த்து

வட மாகாண ஆளுனரின் புத்தாண்டு வாழ்த்து

April 14, 2019  05:23 pm

Bookmark and Share
2019 ஆம் ஆண்டிலே, மலரும் தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் என வட மாகாண ஆளுனர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவது, போருக்கு பின் பத்தாண்டுகள் கடந்து செல்கின்ற இந்த நிலையில் சமுதாய, கலாசார, அரசியல் ரீதியாக ஒவ்வொருவருடைய உரிமைகளும், பொறுப்புக்களும், கிடைக்கப்பெற வேண்டிய ஒரு வருடமாக அமைய வேண்டுமென்று நான் பிரார்த்திக்கின்றேன்.

எமது மக்கள் எல்லோரும் ஒன்றாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலையும், இலங்கை ஒரு சுபீட்சமடைந்த தேசமாகவும் மாறுவதற்கான வாய்ப்புக்களுக்கான அடித்தளம் எடுக்கக்கூடிய ஒரு வருடமாகவும் இப்புத்தாண்டு மலரட்டும்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதிக்கும் ஏனைய அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கும் மலரும் புத்தாண்டு சுபீட்சம் நிறைந்த ஆண்டாக அமைய பிரார்த்திக்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.