Back to Top

யாழ் விபத்தில் ஒருவர் பலி

யாழ் விபத்தில் ஒருவர் பலி

April 14, 2019  11:14 pm

Bookmark and Share
யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறையில் இருந்து நெல்லியடிப் பகுதி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்று பிற்பகல் 03 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் பலத்த காயமடைந்த நபரை பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் கொண்டு செல்லும் போதே உயிரிழந்துள்ளார்.

2ம் குறுக்குத் தெரு, பருத்தித்துறையைச் சேர்ந்த ம.புவிகரன் எனும் 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.