Back to Top

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி - மூவர் வைத்தியசாலையில்

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி - மூவர் வைத்தியசாலையில்

April 15, 2019  12:04 pm

Bookmark and Share
மொணராகல - வெதிகும்புர பகுதியில் இட்ம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

நேற்று (15) மாலை 4.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குறித்த விபத்த இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 27 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

விபத்தில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Most Viewed