Back to Top

IPL 2019 - ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது சென்னை

IPL 2019 - ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது சென்னை

April 18, 2019  10:39 am

Bookmark and Share
12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றிரவு ஐதராபாத்தில் நடந்த 33 வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்சை எதிர்கொண்டது.

சென்னை அணியில் டோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு சுரேஷ் ரெய்னா தலைவர் பொறுப்பை ஏற்றார். டோனிக்கு பதிலாக விக்கெட் காப்பாளர் சாம் பில்லிங்ஸ் இடம் பிடித்தார்.

இதே போல் மிட்செல் சான்ட்னெர் நீக்கப்பட்டு கரண் ஷர்மா சேர்க்கப்பட்டார். ஐதராபாத் அணியில் ரிக்கி புய், அபிஷேக் ஷர்மா கழற்றி விடப்பட்டு யூசுப் பதான், ஷபாஸ் நதீம் திரும்பினர்.

நாணய சுழற்சியை வென்ற சென்னை தலைவர் ரெய்னா முதலில் துடுப்பாட்டத்தை தேர்ந்தெடுத்தார்.

இதன்படி களம் இறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முழுமையாக துடுப்பெடுத்தாடிய நிலையில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்களை பெற்றது.

பின்னர் களம் இறங்கிய ஐதராபாத் அணி 16.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 137 ஓட்டங்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பேர்ஸ்டோ 61 ஓட்டங்களுடன் (44 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார். 9 வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 2 வது தோல்வியாகும். ஐதராபாத் அணிக்கு 4 வது வெற்றியாகும்.

Most Viewed