Back to Top

2 பிரதான அரசியல் கட்சிகளின் மே தின கூட்டங்கள் இரத்து

2 பிரதான அரசியல் கட்சிகளின் மே தின கூட்டங்கள் இரத்து

April 22, 2019  11:29 am

Bookmark and Share
நாட்டில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பங்கள் மற்றும் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறும் வகையில், இலங்கை தொழிலாளர் காங்ரஸின் மே தின கூட்டமும் தமிழ் முற்போக்கு கூட்டனியின் மே தின கூட்டம் இரத்து செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

தமிழ் முற்போக்கு கூட்டனியின் மே தின கூட்டம் தலவாக்கலை நகரசபை மைதானத்தில் ஏற்பாடு செய்யபட்டிருந்தவேளை, அன்றைய தினம் கிருஸ்தவ ஆலயங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த உள்ளதாக, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டனியின் பிரதி தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்ரசின் மே தின நிகழ்வு அதன் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் ஏற்பாடு செய்யபட்ட மே தின நிகழ்வு இரத்து செய்யபட்டு, உயர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த உள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

(மலையக நிருபர் சதீஸ்குமார்)