Back to Top

விற்பனை சிறப்புக்கான பிரதம நிறைவேற்று அதிகாரியின் விருதுகள் வழங்கும் நிகழ்வில் களனி கேபல்ஸ் ஊழியர்களுக்கு கௌரவிப்பு

விற்பனை சிறப்புக்கான பிரதம நிறைவேற்று அதிகாரியின் விருதுகள் வழங்கும் நிகழ்வில் களனி கேபல்ஸ் ஊழியர்களுக்கு கௌரவிப்பு

April 23, 2019  01:34 pm

Bookmark and Share
இலங்கையின் முதல் தர பாதுகாப்பான இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல்கள் கேபல்கள் உற்பத்தியாளரான களனி கேபல்ஸ் பிஎல்சி, சிறப்பாக செயலாற்றியிருந்த விற்பனை ஊழியர்களை கௌரவிக்கும் வகையில், தொடர்ச்சியான ஆறாவது ஆண்டாக பிரதம நிறைவேற்று அதிகாரியின் விருதுகள் வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வு களனி கேபல்ஸ் பிஎல்சியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹிந்த சரணபாலவின் பங்குபற்றலுடன் வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் ஆண்டின் சிறந்த பிராந்திய விற்பனை முகாமையாளராக ரொஷான் டி சில்வா தெரிவு செய்யப்பட்டிருந்தார். ஆண்டின் சிறந்த விற்பனை அதிகாரியாக ஷானக அதுகோரல தெரிவு செய்யப்பட்டதுடன், இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை முறையே நளின் சமன்திலக மற்றும் சின்தக ராஜபக்ஷ ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

விருதுகளை பெற்றுக் கொண்ட ரொஷான் டி சில்வா மற்றும் ஷானக அதுகோரல ஆகியோர் ஆண்டில் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தமைக்காக பணப் பரிசுகளையும் வெளிநாட்டு சுற்றுப் பயண வாய்ப்புகளையும் பெற்றுக் கொண்டனர். 2017 / 2018 காலப்பகுதிக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த விற்பனை இலக்குகளை இவர்கள் கடந்திருந்ததுடன், சாதனை மிகுந்த விற்பனை பெறுமதிகளையும் பதிவு செய்திருந்தனர்.

இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் களனி கேபல்ஸ் பிஎல்சியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹிந்த சரணபால கருத்துத் தெரிவிக்கையில், ´480 இதயங்கள், ஒரே துடிப்பு´ எனும் தொனிப்பொருளுக்கமைய களனி கேபல்ஸ் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. நிறுவனத்தின் முதுகெலும்பாக விற்பனை செயலணி அமைந்துள்ளது. ´எமது நிறுவனத்தின் முதுகெலும்பாக ஊழியர்கள் காணப்படுகின்றமையால், அவர்களின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளை வருடாந்தம் கௌரவித்து, அவர்களை மேலும் ஊக்குவித்து, நிறுவனத்தின் வெற்றிக்காக பங்களிப்பு வழங்கச் செய்வது மிகவும் முக்கியமான விடயமாகும். சமூகப் பொறுப்பு வாய்ந்த நிறுவனமொன்றின் கடமை என்பது, நிறுவனத்தின் நிலைபேறாண்மைக்கு பங்களிப்பு வழங்கும் ஊழியர்களை கௌரவிப்பதாகும்.´ என்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ´விற்பனைச் சிறப்புக்காக வருடாந்தம் பங்களிப்பு வழங்கும் சிறந்த இரண்டு ஊழியர்களுக்கு வருடாந்தம் பிரதம நிறைவேற்று அதிகாரியான விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்ட ஷாந்த அதுகோரல மற்றும் ரொஷான் டி சில்வா ஆகியோர் தமது விற்பனை இலக்குகளை கடந்திருந்ததுடன், பாரியளவு தனிநபர் விற்பனை பெறுமதிகளை எய்தியிருந்தனர். இவர்களின் சாதனைக்காக நான் நிறுவனத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.´ என்றார்.

களனி கேபிள்ஸ் என்பது 100 வீதம் இலங்கையை சேர்ந்த கம்பனியாகும். சுமார் 48 வருட காலமாக இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்களை உற்பத்தி செய்வதில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 2008 இல் களனி கேபிள்ஸ் பிஎல்சி ´சுப்பர் பிரான்ட´; நிலையை எய்தியிருந்தது. குறிப்பாக நிபுணத்துவம் வாய்ந்த சிறப்பாண்மைச் செயற்பாடுகளுக்காக கம்பனி இந்த நிலையை எய்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. களனி கேபல்ஸ் நிறுவனத்துக்கு தரச்சிறப்புக்கான ISO 9000:2008 சான்று, சிறந்த சூழல் முகாமைத்துவத்துக்கான ISO 14001:2004 தரச்சான்றும் வழங்கப்பட்டுள்ளன. தய்கி அகிமொடோ 5S விருதுகளின் தங்க விருதும் களனி கேபல்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 2015 இல் களனி கேபல்ஸ் பிஎல்சி ஆசியாவின் சிறந்த தொழில் வழங்குநர் விருதை தனதாக்கியிருந்தது. களனி கேபள்ஸ் இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபல்ஸ் உற்பத்தி பிரிவு, 2015 தேசிய பசுமை விருதுகள் வழங்கலில் நிலைபேறான அபிவிருத்திக்காக கௌரவிக்கப்பட்டிருந்தது. 2015 இல் நிறுவனம் SLIM வர்த்தக நாமச் சிறப்புகள் விருதுகள் வழங்கலின் போது B2B பிரிவில் சிறந்த நிறுவனசார் சமூக பொறுப்புணர்வு செயற்பாட்டுக்கான விருதை தனதாக்கியிருந்தது. SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் 2012 இல், களனி கேபல்ஸ் பிஎல்சி நிறுவனத்துக்கு சிறந்த வர்த்தக நாமத்துக்கான வெண்கல விருது வழங்கப்பட்டிருந்தது.

2013 இல் இடம்பெற்ற SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் வழங்கலில், இதே பிரிவில் தங்க விருதை தனதாக்கியிருந்தது. SLITAD மக்கள் அபிவிருத்தி 2013 விருதுகள் வழங்கும் நிகழ்வில், தனது ஊழியர்களின் பயிற்சிகள் மற்றும் மற்றும் நலன்புரி செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தமைக்காக தங்க விருதையும் தனதாக்கியிருந்தது. 2016ம் ஆண்டில் தேசிய மனித வளங்கள் சிறப்புக்கான வெள்ளி விருதை தனதாக்கியிருந்ததுடன், ஜனாதிபதி சூழல் விருதுகள் வழங்கும் நிகழ்வில் சூழல் பாதுகாப்பான அறிக்கையிடலுக்கான தங்க விருதையும் தனதாக்கியிருந்தது.

தேசிய சூழல்பாதுகாப்பு சார் அறிக்கையிடலை பின்பற்றுவதற்காக வாக்குறுதி எடுத்துக் கொண்ட இலங்கையின் முதலாவது நிறுவனமாக களனி கேபிள்ஸ் பிஎல்சி திகழ்கிறது. சூழலுக்கு நட்பான சமூகப் பொறுப்பு வாய்ந்த நிறுவனம் எனும் வகையில், களனி கேபிள்ஸ் பிஎல்சி, ´பொறுப்பு வாய்ந்த பராமரிப்பு´ எனும் லேபிளை பயன்படுத்துவதற்கு சான்றை பெற்றுள்ளது. ஏற்றுமதி சந்தைக்கு நிறுவனத்தின் கீர்த்தி நாமத்தில் இது பெருமளவு பெறுமதியை சேர்த்திடும் வகையில் அமைந்துள்ளது.