Back to Top

IIoT தீர்வுகளை அறிமுகப்படுத்திட UTECH Technologies உடன் மொபிடெல் கூட்டிணைகிறது

IIoT தீர்வுகளை அறிமுகப்படுத்திட UTECH Technologies உடன் மொபிடெல் கூட்டிணைகிறது

April 24, 2019  12:28 pm

Bookmark and Share
இலங்கையின் தேசிய மொபைல் சேவை வழங்குனர்களான மொபிடெல், அண்மையில் UTECH உடனான மூலோபாய கூட்டிணைவினைப் பற்றி அறிவித்தது. அங்கிகாரம் பெற்ற மீள் விற்பனையாளர் என்ற வகையில் மொபிடெல் UTECH உடன் கூட்டிணைந்து தனிப்பயனாக்கப்பட்ட IIoT (Industrial Internet of Things) தீர்வுகளை வழங்குகிறது.

கட்டுமானம், வலு, உற்பத்திகள், விவசாயம் மற்றும் விநியோகச் சங்கிலி என பல்வேறுபட்ட தொழிற்துறைகளுக்கு இத்தீர்வுகள் வழங்கப்படுகின்றன. IIoT தீர்வுகள் வேலையின்மையை குறைப்பதனால் தொழிற்துறைகளில் வினைத்திறனை அதிகரித்து அதன் மூலம் உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது. இதனால் மொத்த இலாபமும் அதிகரிக்கிறது. IoT ஆனது 25 பில்லியனுக்கும் மேற்பட்ட சொத்துக்களுடன் GSMA புள்ளி விபரத்தின் படி 2025 இல் இணைக்கப்படவுள்ள, உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிற்துறைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது.

IIoT தீர்வுகள் தொழிற்துறைகளில் சிறந்த கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள்: நீட்டிக்கப்பட்ட மீளாய்வுகளுக்கு சரியான நேரத்தில் துல்லியமான தரவுகளைச் சேகரித்தல், ப்ரொசெஸ் ஒடோமேஷனை உறுதிசெய்தல், செயல்திறன் மிக்கஅடையாளத்தை அடைதல், மூல காரண மீளாய்வுகளுக்கு தேவையான தரவுகளை தயாரிக்க உதவுதல், தடுக்கும் அளவு கோல்களை நடைமுறைப்படுத்தல் போன்றவற்றை செய்திட கம்பனிகளுக்கு உதவுகிறது. மேலும் இக்கூட்டிணைவின் நிபந்தனைகளின் அடிப்படையில் மொபிடெல் ஆனது UTECH உடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டு புதிய தேவைகளுக்கான கூட்டு R&D யினைநடாத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களுடன் எல்லையற்ற முறையில் தற்போதுள்ள அமைப்புக்களுடன் தொடர்ச்சியாக இயங்குவதற்கும் எங்கள் மூலோபாய கூட்டணி பலங்களின் ஆதரவுடன் செயற்படுவதற்கும் முழுவதுமாக தனிப்பயனாக்கப்பட்ட IIoT தீர்வுகள் உதவுகின்றன.

மொபிடெல் ஆனது IoT மற்றும் IIoT என்பவற்றில் தமது செல்வாக்கினை விரிவுபடுத்துவதற்காக கடந்த சில ஆண்டுகளுள் இலங்கையர்களுக்கு சிறந்த மேம்பட்ட தொழில்நுட்பங்களை கொண்டு வருவதில் பெருமளவிலான முதலீடுகளை செய்து, பெரும் முன்னேற்றத்தை எட்டியுள்ளது. மொபிடெல் ஆனது வணிக வியாபாரங்களின் வளர்ச்சிக்கும் அதன் ஊக்குவிப்புக்கும் தம்மை அர்ப்பணித்துள்ளது. நவீன தொழில்நுட்பத்தினைக் கொண்டுள்ள மொபிடெலின் இலக்கானது வியாபார ரீதியான தீர்வுகளை எதிர்ப்பார்க்கும் நபர்களுக்கு இத்தொழிற்துறை தீர்வுகளை அணுகச் செய்வதன் மூலம் அவர்களது வினைத்திறனையும் உற்பத்தித் திறனையும் மேம்படுத்திடவும் மற்றும் மீள்பொறியியல் செயன்முறைகளை அதிகரித்திட உதவுவதும் ஆகும். மொபிடெலின் வணிகத் தீர்வுகள் போர்ட்போலியோவானது பெருநிறுவனங்களுக்கு நிறுவனதரம், தொழிற்துறையில் முன்னணி வகிக்கும் தயாரிப்புக்கள் மற்றும் தொழில்நுட்பம் ரீதியான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளை வழங்குகிறது.

UTECH ஆனது United Tractor & Equipment (Private) Limited இன் ஒரு துணைநிறுவனமாகும். UTE எனவும் அறியப்படும் இவர்கள் இலங்கையில் கட்டுமானங்கள், வலு, சுற்றுச்சூழல் பொறியியல், பொருட்கள் கையாளுதல் மற்றும் உற்பத்தித் தொழிற்துறைகளுக்கு பொறியியல் தீர்வுகளை வழங்கும், பொறியியல் தீர்வுகள் வழங்குனர்கள் ஆவர். UTE இன் 70 வருடங்களுக்கும் மேற்பட்ட பொறியியல் நிபுணத்துவ அனுபவம் மற்றும் UTECH இன் R&D நவீன முன்னெடுப்புக்கள் வாடிக்கையாளர்களுக்கு IIoT தீர்வுகளைப் போன்ற தொழில்நுட்ப ரீதியான தேவைகளை கட்டுப்படியான விலையில் பெற்றுத்தரும் நிலையை உருவாக்கியுள்ளது. UTECH இன் தொழில்நுட்பம் சமீபத்தியநிரலாக்க நுண்செயலிகள், சென்சர் நெட்வர்க்குகள், தகவல் தொடர்பாடல்கள் மற்றும் GPS என்பவற்றைவாகனத்தில் இணைத்திடும் உபகரணங்கள், பூமியில் நகரும் உபகரணங்கள், வலுஉற்பத்தியாக்கிகள் மற்றும் தொழிற்துறை இயந்திரங்கள் என்பவற்றை இணையத்துடன் இணைக்கப்பட்டு உலகில் எங்கிருந்தாலும் நிகழ்நேரத்தில் அவற்றை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

Most Viewed