Back to Top

குளவி கொட்டியதில் ஒருவர் பலி 9 பெண்கள் வைத்தியசாலையில்

குளவி கொட்டியதில் ஒருவர் பலி 9 பெண்கள் வைத்தியசாலையில்

April 24, 2019  03:52 pm

Bookmark and Share
தேயிலை கொழுந்து பரித்துக் கொண்டிருந்தவர்கள் மீது குளவி கொட்டியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 9 பெண் தொழிலாளர்கள் காயமடைந்து வைத்தியலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவான தோட்டத்தை சேர்ந்த 62 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான ராமன் வெள்ளையம்மா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொகவான தோட்டத்தில் 08 ம் இலக்க தேயிலை மலையில் கொழுந்து பரித்துகொண்டிருந்த போதே இன்று (24) மதியம் 12 மணியளவில் இவ்வாறு குளவி கூடு கலைந்து கொட்டியுள்ளது.

இதில் 10 பேர் காயமடைந்த நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்தவர்கள் தொடர்ந்து பொகவந்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலா பொலிஸார் தெரிவித்தனர்.

(மலையக நிருபர் இராமச்சந்திரன்)