Back to Top

கொழும்பு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் யாழில் கைது?

கொழும்பு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் யாழில் கைது?

April 25, 2019  11:05 am

Bookmark and Share
கொழும்பு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் முஸ்லிம் நபர்கள் 5 பேரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம், நாவாந்துறை 5 சந்திப் பகுதியில் வைத்து இன்று (25) காலை இவர்கள் கைது செய்துள்ளனர்.

வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சந்தேகத்திற்கிடமாக நின்ற காரணத்தினால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

வெடிப்புச் சம்பவத்தின் பின்னர், யாழ்ப்பாணத்தில் பொலிஸார் உட்பட இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், சோதனை நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

(யாழ். நிருபர் சுமித்தி)