Back to Top

முகாமைத்துவ சிறப்புக்காக ஜோன் கீல்ஸ் லொஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துக்கு கௌரவிப்பு

முகாமைத்துவ சிறப்புக்காக ஜோன் கீல்ஸ் லொஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துக்கு கௌரவிப்பு

April 25, 2019  12:58 pm

Bookmark and Share
இலங்கையில் காணப்படும் முன்னணி மூன்றாம் நபர் சரக்கு கையாளல் (3PL) சேவைகளை வழங்கும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் லொஜிஸ்டிக்ஸ் (பிரைவட்) லிமிடெட் (JKLL), ´சிறந்த முகாமையாளர்களைக் கொண்ட நிறுவனம்´ எனும் கௌரவிப்பை பெற்றிருந்தது. சிறந்த முகாமையாளர் விருதுகள் 2018 நிகழ்வின் போது இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு நிகழ்வு அண்மையில் கொழும்பு, கிங்ஸ்பரி ஹோட்டலில் இடம்பெற்றது.

சிறந்த மூன்று விருதுகளை பெற்றுக் கொண்டவர்களில், கணக்கியலாளர் கௌஷல்ய ஹபுஆரச்சி, தனிநபர் தங்கியிருப்பை நிலைபெறச் செய்தல் பிரிவில் சிறந்த முகாமையாளருக்கான விருதை பெற்றுக் கொண்டதுடன், விநியோக நிலைய முகாமையாளரான சம்பத் கொடகம, பெறுபேறுகளை விநியோகித்தல் மற்றும் நிறைவேற்றல் பிரிவில் சிறந்த முகாமையாளர் விருதையும், களஞ்சியசாலை மேற்பார்வையாளரான சமீர தசநாயக்க ஊழியர் வினைத்திறனை மேம்படுத்தல் பிரிவில் சிறந்த முகாமையாளருக்கான விருதையும் பெற்றுக் கொண்டார்.

இந்த விருதுகளை சர்வதேச மனித வளங்கள் நிர்வாக ஆலோசனை கட்டமைப்பான த கிரேட் மனேஜர் விருதுகள் வழங்கியிருந்தது. இதன் நோக்கம், வினைத்திறன் ஆற்றலை மேம்படுத்துவது மற்றும் பங்காளர் நிறுவனங்களின் வியாபார உள்வாங்கல்களை விரிவாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தது. இந்த விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்ட தனிநபர்கள் சு-ழுPவுஐ முறைக்கமைய ஊழியர்களின் முகாமைத்துவ சிறப்புகள் ஐந்து பிரிவுகளில் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தனர் - இதில் பெறுபேறுகளை பதிவு செய்தல், நிறுவனத்தின் நோக்கத்தை பின்பற்றல், ஊழியர் வினைத்திறனை மேம்படுத்தல், அணியின் வினைத்திறனை கட்டியெழுப்பல் மற்றும் தனிநபர் தங்கியிருப்புத் திறனை தக்கவைத்தல் போன்றன அடங்கியுள்ளன. கருத்தாய்வு மற்றும் பெறுபேறுகள் போன்றன அனுபவம் வாய்ந்த நடுவர் குழுவினால் மீளாய்வுக்குட்படுத்தப்பட்டிருந்தது.

இந்த விருதுகளை பெற்றுக் கொண்டமை தொடர்பாக துமுடுடு பிரதம நிறைவேற்று அதிகாரி செனத் ஜயதிலக கருத்துத் தெரிவிக்கையில், ´எமது சிறந்த சாதனையாளர்களை எண்ணி நாம் பெருமை கொள்கிறோம். எமது நிறுவனத்தின் மாபெரும் சொத்தாக எமது அணி காணப்படுகிறது. வெற்றிகரமான செயற்பாடு, வளர்ச்சி மற்றும் எமது வியாபாரத்தின் நிலைபேறாண்மை போன்றன போன்றன அணியின் ஒவ்வொரு தனிநபரும் தமது முழு அர்ப்பணிப்பை எப்போதும் வெளிப்படுத்துவதில் தங்கியிருக்கும். நிறுவனசார் கட்டமைப்பை நாம் எப்போதும் முன்னெடுப்பதில் கவனம் செலுத்துவதுடன், இதனூடாக தொழில்முயற்சியாண்மை, புத்தாக்கம் மற்றும் தலைமைத்துவ திறன்களை அணியினுள் கட்டியெழுப்புவது பற்றி கவனம் செலுத்துகிறோம். இது போன்ற விருதுகள் அவற்றை மீள உறுதி செய்வதுடன், நாம் சரியான செயற்பாடுகளை மேற்கொள்வதை உறுதி செய்வதாக அமைந்துள்ளன.

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் முழு உரிமையாண்மையின் கீழ் இயங்கும் துணை நிறுவனமான JKLL, முன்னணி மூன்றாம் தரப்பு ஒப்பந்த சரக்கு கையாளல் (3PL) தீர்வுகளை வழங்கும் சேவை வழங்குநராக திகழ்கிறது. பிரதான நெடுஞ்சாலைகள், தொழிற்பேட்டைகள், நகர நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை அண்மித்து நவீன சரக்கு கையாளல் நிலையங்கள் அமைந்துள்ளதுடன், போக்குவரத்து வாகனங்கள் தொடரணியை கொண்டுள்ளது. பரந்தளவு சரக்கு கையாளல் துறைக்கு சேவைகளை பெற்றுக் கொடுக்க JKLL தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், விநியோகத் தொடர் சம்பந்தமான சேவை தேவைகளையும் நிவர்த்தி செய்ய துமுடுடு முன்வந்துள்ளது.

500,000 சதுர அடிக்கு அதிகமான சரக்கு கையாளல் இடவசதியை துமுடுடு தன்வசம் கொண்டுள்ளதுடன், வெப்பநிலையை கட்டுப்படுத்தும் வசதிகளையும் தன்வசம் கொண்டுள்ளது. நிறுவனம் ISO 9001:2015 மற்றும் OHSAS 18001:2007 சான்றிதழ்களை பெற்றுள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியாக, உயர் தரம் வாய்ந்த சேவை மட்டங்களை சர்வதேச சிறந்த செயன்முறைகள் மற்றும் நியமங்களின் பிரகாரம் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் வழங்கி வருகிறது.