Back to Top

ரயன் வேன் ரோயன் மீண்டும் விளக்கமறியலில்

ரயன் வேன் ரோயன் மீண்டும் விளக்கமறியலில்

April 25, 2019  02:33 pm

Bookmark and Share
டுபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோயனை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோயன் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது அவரை எதிர்வரும் 02ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த 11ம் திகதி நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட அவர் இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.



குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.

Most Viewed