Back to Top

நுவரெலியா பகுதியில் 198 டெட்டனேட்டர் மீட்பு

நுவரெலியா பகுதியில் 198 டெட்டனேட்டர் மீட்பு

April 25, 2019  09:59 pm

Bookmark and Share
நுவரெலியா ஹெவெளிய மஹிந்த மாவத்தை பகுதியில் கால்வாய் ஒன்றில் இருந்து 198 டெட்டனேட்டர்கள் மீட்கபட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (24) காலை 10 மணி அளவில் குறித்த டெட்டனேட்டர்கள் மீட்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை காரணமாக நுவரெலியா பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பின் போது பிரதேச மக்களால் குறித்த பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் பொதி ஒன்று கிடப்பதாக பொலிஸாரிற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் பொதியினை மீட்டு பரிசோதனைக்கு உட்படுத்திய போது குறித்த பொதியில் 198 டெட்டனேட்டர்கள் இனங்காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரையில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யபடவில்லை எனவும் பொலிஸார் மற்றும் இரானுவத்தினர் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

(மலையக நிருபர் சதீஸ்குமார்)