Back to Top

இலங்கையின் மோட்டார் பந்தயத்துக்கான தனது ஆதரவை மீளஉறுதிப்படுத்தியது  சியெட்

இலங்கையின் மோட்டார் பந்தயத்துக்கான தனது ஆதரவை மீளஉறுதிப்படுத்தியது சியெட்

April 26, 2019  10:20 am

Bookmark and Share
உயர் ரக டயர் உற்பத்தி நிறுவனமான சியெட், இலங்கையின் மோட்டார் பந்தயங்களுக்கான தனது ஆதரவை மீளப் புதுப்பித்துள்ளது.

இவ்வாண்டின் பந்தயப் பருவ காலத்தில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தும் 3 அர்ப்பணிப்புகளை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளதோடு, போட்டியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் ஒரே மாதிரியான மாற்றத்தை இதன் மூலமாக வழங்கவுள்ளது.

பல்வேறு வகையான பிரிவுகளில் இலங்கையில் அதிகளவு விற்பனையாகும் டயர் வகையான சியெட், தனது சொந்த மோட்டார் பந்தய அணியை, 7 ஆவது தொடர்ச்சியான ஆண்டாகவும் உருவாக்கியுள்ளதோடு, மோட்டார் பந்தயத்தின் உச்ச நிலை வருடாந்த சம்பியன்ஷிப் தொடருக்கு 10 ஆவது தொடர்ச்சியான ஆண்டாகவும் பிரதான அனுசரணையை வழங்கவுள்ளதோடு, இலங்கை ஓட்டோமொபைல் ஸ்போர்ட்ஸ் (எஸ்.எல்.ஏ.எஸ்) அமைப்பால் அனுமதியளிக்கப்பட்ட ´வண் மேக்´ தொடருக்கான அனுசரணையை, அடுத்த 3 ஆண்டுகளுக்கு வழங்கவுள்ளது.

இலங்கை ஓட்டோ ஸ்போர்ட்ஸ் சாரதிகள் சங்கத்தால் (எஸ்.எல்.ஏ.டி.ஏ) ஆண்டின் பல்வேறு காலங்களில் நடத்தப்படவுள்ள 5 பந்தயங்களின் அடிப்படையில், சியெட் எஸ்.எல்.ஏ.டி.ஏ 2019 சம்பியன்ஷிப் தொடர் முடிவு செய்யப்படவுள்ளது. கஜபா சுப்பர் குறொஸ், கண்ணர்ஸ் சுப்பர் குறொஸ், சீகிரியறலிகுறொஸ், கட்டுகுருந்த மோட்டார் குறொஸ், ஃபொக்ஸ் ஹில் சுப்பர் குறொஸ் ஆகியனவே, அந்த 5 பந்தயங்களாகும். இதில் ஃபொக்ஸ் ஹில் பந்தயமென்பது, இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சால் நடத்தப்படுவதோடு, மோட்டார் பந்தயக் கழகங்கள் அனைத்தும் பங்குபற்றும் ஒரு தொடராகும்.

சியெட் சீருடையை அணிந்து கொண்டு, 2019 ஆம் ஆண்டுக்கான சியெட் பந்தயஅணியில் இந்தப் பந்தயங்களிலும் ஏனையவற்றிலும் உபுல்வன் சேரசிங்க, உஷான் பெரேரா, மாலிககுருவித்தாராச்சி, டெவின் சேரசிங்க, சமொட் பெரேரா, கேணல் துமிந்த ஜயசிங்க, கேணல் இந்து சமரக்கோன், சமொட் சமரக்கோன் ஆகியோர் இடம்பெறவுள்ளதோடு, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களாக இவோன் பியாகீகுருசிங்க, ஜக்ஸ் குணவர்தன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சியெட் நிறுவனத்தால் அனுசரணை வழங்கப்படவுள்ள எஸ்.எல்.ஏ.எஸ்-இன் ´வண் மேக்´ பந்தயங்களிலும் சியெட் அணிபங்குபற்றும். இந்தவகையான பந்தயங்கள், சியெட் நிறுவனத்தின் ´றடிக்கல்´ வகையான டயர்களைக் கொண்ட வாகனங்கள் மாத்திரமே பங்குபற்றும் பந்தயங்களாகும். இந்தப் பந்தயங்களுக்கு ஃபோர்ட் லேசர்ஃமஸ்டா - 1,300 சிசி, 1,500 சிசி, நிஸான் மார்ச் - 1,000 சி.சி, மினி - 1,275 சிசி ஆகியவாகன வகைகள் காணப்படுகின்றன. ´வண் மேக்´ பந்தயவகைக்கான அனைத்துப் போட்டியாளர்களுக்குமான டயர்களை, சியெட் வழங்கும்.

எதிர்வரவுள்ள ஓராண்டு காலத்துக்கான மோட்டார் பந்தயங்களுக்கான சியெட்டின் அர்ப்பணிப்பு உத்தியோக பூர்வமாக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ரவிதட்லனி கருத்துத் தெரிவிக்கையில், ´இலங்கையில் மோட்டார் பந்தயங்களை மீள உயிர்ப்பித்ததில் முன்னணியான பங்கை சியெட் வகித்திருக்கிறது என்பதை, இலங்கையின் மோட்டார் பந்தயச் சமுதாயம் பல தருணங்களில் ஏற்றுக்கொண்டிருக்கிறது. உயர் திறன்மிக்க, நீண்டகாலம் பயன்படுத்தப்படக் கூடிய, பாதுகாப்பான டயர்களின் உற்பத்தியாளர்கள் என்ற அடிப்படையில், வெறுமனே துணையான பங்கைவகிப்பதோடு நிறுத்தி விட சியெட் விரும்பவில்லை. மாறாக, இந்த விளையாட்டைப் பிரபலப்படுத்துவதற்கும் அதன் தரங்களை உயர்த்துவதற்கும் நேரடியான பங்கை வகிக்கிறது. கடந்த 12 மாதங்களில் எமது பல்வேறான தலையீடுகள் மூலமாக, நாட்டில் மோட்டார் பந்தயங்களின் அபிவிருத்திக்குப் பங்களித்தமை குறித்துநாம் பெருமையடைகிறோம்´ எனத் தெரிவித்தார்.

எஸ்.எல்.ஏ.எஸ் ´வண் மேக்´ பந்தயங்கள், சியெட்டின் ´றடிக்கல்´ டயர்களைக் கடினமான சூழ்நிலைகளில் திறமையான சாரதிகளால் சோதிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குகின்றன எனவும் அவர் தெரிவித்தார். 2019 ஆம் ஆண்டுக்கான சியெட் பந்தய அணிக்கான ஒப்பந்தங்களை உத்தியோகபூர்வமாகக் கைச்சாத்திடும் நிகழ்வு, ஜெய்க் ஹில்ட்டன் ஹோட்டலில் இடம்பெற்றதோடு, அதைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டுக்கான சியெட் எஸ்.எல்.ஏ.டி.ஏ சம்பியன்ஷிப் தொடருக்கான பிரதான அனுசரணைக்கான ஒப்பந்தம், சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கும் எஸ்.எல்.ஏ.எஸ்-க்கும் இடையில் ´வண் மேக்´ பந்தயங்களை 2019 ஆம் ஆண்டுக்கும் 2021 ஆம் ஆண்டுக்கும் இடையிலான வணிகக்குறி அனுசரணையை உறுதிப்படுத்தும் ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

இந்த அர்ப்பணிப்புகளுக்கு மேலதிகமாக, இலங்கை இராணுவம், இலங்கைக் கடற்படை, இலங்கை விமானப்படை ஆகியவற்றால், நாட்டின் வருடாந்த மோட்டார் பந்தய நாட்காட்டியின் அங்கமாக நடத்தப்படும் பந்தயங்களுக்கும் சியெட் ஆதரவு வழங்குகிறது.